காதலனின் கரம் பிடிக்க அரசபதவியை உதறிய இளவரசி ! யார் அவர் ?
The Queen Left her status for Her Love.
By : TamilVani B
வசதியான வீட்டு பெண் தன்னை விட பொருளாதாரத்தில் குறைந்த ஒருவரை திருமணம் செய்ய தனது சுக போகங்களை உதறிவிட்டு வருவதை திரைபடங்களில் பார்த்திருப்போம். இந்த காட்சி தற்போது ஜப்பான் நாட்டில் நடந்துள்ளது. வசதியான பெண் என்று சொல்வதை விட அந்நாட்டு இளவரசி தன் காதலுக்காக ராஜபதவியை உதறியுள்ளார்.
ஜப்பான் நாட்டின் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் சாதரணமானவர்களை திருமணம் செய்து கொண்டால் அவர்களின் அரசபதவி பறிக்கப்படும்.
ஜப்பான் நாட்டின் பேரரசர் நரிஷ்டோவின் இளைய சகோதரான இளவரசர் புமிஷ்டோவின் மூத்த மகள் இளவரசி மகோ. இவர் அங்குள்ள பல்கலைகழகத்தில் படிக்கும் போது கொமுரோ என்ற சாதாரண குடும்பத்தை சேர்ந்தவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் ஜோடி கடந்த 2017 ம் ஆண்டு நிச்சயம் செய்து கொண்டு 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், கொமுரோவின் தாயார் அவரின் படிப்புக்கு வாங்கிய கடனை திரும்ப தரவில்லை என புகார் எழுந்தநிலையில் அவர்களின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது அவர்களின் திருமணம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடக்கும் என தகவல்கள் வெளிவருகின்றன. கொமுரோ அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு முடித்து அங்கு பார்கவுன்சில் தேர்வெழுதியுள்ளார்.இதனால் அவரும் மகோவும் திருமணம் முடிந்து அமெரிக்காவுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
மகோ இனி ஜப்பானுக்கு இளவரசி இல்லை என்றாலும் அவர் கொமுரோவின் பட்டத்துராணியாகிவிட்டார்.