Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா கொண்டு வந்த தீர்மானம் ஐ.நா தலைமையகத்தில் நிறைவேறியது: இந்தியாவை பெருமைப்படுத்திய அந்த தீர்மானம் என்ன தெரியுமா?

வீர மரணம் அடைந்த அமைதி படையினரை கௌரவித்து ஐ.நா தலைமையகத்தில் நினைவுச்சின்னம் ஏற்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் தீர்மானம் ஐ.நா சபையில் நிறைவேறியது. இதை பிரதமர் மோடி வரவேற்றார்.

இந்தியா கொண்டு வந்த தீர்மானம் ஐ.நா தலைமையகத்தில் நிறைவேறியது: இந்தியாவை பெருமைப்படுத்திய அந்த தீர்மானம் என்ன தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  16 Jun 2023 2:00 PM GMT

ஐ.நா அமைதிப்படைவீர்கள் தங்கள் பணியின் போது தாக்குதல்களில் வீரமரணம் அடைந்ததை போற்றும் வகையில் ஐ.நா தலைமையகத்தில் ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்பது இந்தியாவின் கோரிக்கை. இது தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இந்தியாவின் சார்பில் ஐ.நா.வுக்கான தூதர் ருசித்ரா காம்போஜ் ஒரு தீர்மானத்தை நேற்று முன்தினம் கொண்டு வந்து அறிமுகம் செய்தார்.

இந்தியாவின் தீர்மானத்தை வங்காளதேசம், கனடா, சீனா, டென்மார்க், எகிப்து, பிரான்ஸ் இந்தோனேசியா, ஜோர்டான், நேபாளம் ருவணர்டா , அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாக கொண்டு வந்தன. தீர்மானத்தை அறிமுகம் செய்த ஐ.நாவுக்கான தூதர் ருசித்ரா காம்போஜ் பேசும்போது ஐ.நா அமைதி காக்கும் படையில் பணியாற்றி உயிர் நீத்தவர்களின் முக்கியத்துவத்துக்கு சான்றாக அமைகிற வகையில் ஐ.நாவில் நினைவுச் சுவர் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


மேலும் இந்த நினைவு சின்னம் வீரமானமடைந்த வீரர்களின் தியாகத்தை மட்டுமல்ல நமது முடிவுகளுக்கு நாம் கொடுத்த விலையை நினைவுபடுத்துவதாக அமையும் எனவும் குறிப்பிட்டார் . இந்த தீர்மானத்திற்கு ஐ.நா சபையின் சுமார் 190 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன் காரணமாக அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.


இதை பிரதமர் மோடி வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தார். இது பற்றி அவர் டுவிட்டர் இல் வெளியிட்ட பதிவில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றி வீரமரணம் அடைந்தோருக்காக புதிதாக ஒரு நினைவுச் சுவர் எழுப்ப வேண்டும் என்று இந்தியா முன்மொழிந்து கொண்டு வந்த தீர்மானம் ஐ.நா சபையில் நிறைவேறி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது . இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 190 நாடுகள் குரல் கொடுத்துள்ளன. அவர்களின் ஆதரவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும் இந்தியாவின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக ஐ.நா உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News