Kathir News
Begin typing your search above and press return to search.

செயற்கை அறிவு தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கி அசத்திய இந்திய மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி!

இந்தியாவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் செயற்கை அறிவு தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கி பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் நன்கொடை பெற்றுள்ளனர்.

செயற்கை அறிவு தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கி அசத்திய இந்திய மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி!
X

KarthigaBy : Karthiga

  |  4 Nov 2023 12:13 PM GMT

இந்தியாவை சேர்ந்த 19 வயது மாணவர்கள் ஆரியன் சர்மா மற்றும் ஆயுஷ் பதக் இவர்கள் இணைந்து செயற்கை தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இதற்கு அமெரிக்காவை சேர்ந்த பிரபல செயற்கை அறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஷாம் அல்டிமேட் தனது பெரும் ஆதரவை வழங்கியுள்ளார். அவர் மேலும் சில நிறுவனங்களுடன் இணைந்து அந்த மாணவர்களின் நிறுவனத்துக்கு பெரும் நன்கொடை நிதி திரட்டி கொடுத்துள்ளார். அவர்களுக்கு 2.3 மில்லியன் டாலர் நன்கொடை கிடைத்துள்ளது


இளம் சிறுவர்கள் ஆன இவர்கள் பெரும் நிறுவனங்களை எப்படி தங்களுக்கு உதவ வைத்தார்கள் என்பது பற்றிய வெற்றி கதையை ஆரியன் சர்மா இணையத்தில் வெளியிட அது பலரையும் கவர்ந்துள்ளது. இவர்களின் தொழில்நுட்பமானது அலுவலக பணியை எளிமையாக்கவும் ரகசிய குறியீடாக சேமித்து வைக்கவும் உதவுகிறது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News