Kathir News
Begin typing your search above and press return to search.

'எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறைந்த தீர்ப்பு கொடுத்த உச்சநீதிமன்றம்'- பிரதமர் மோடி!

வி.வி பாட் இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகளை 100% எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக உச்சநீதிமன்றம் அறை விட்டிருக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறைந்த தீர்ப்பு கொடுத்த உச்சநீதிமன்றம்- பிரதமர் மோடி!

KarthigaBy : Karthiga

  |  27 April 2024 12:46 PM GMT

பீகார் மாநிலம் ஆராரியாவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ,'இன்று நமது ஜனநாயகத்திற்கு ஒரு மகத்தான நாள். மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் குறித்து குறை கூறி வந்த எதிர்கட்சிகளின் முகத்தில் இன்று கடுமையாக அறைந்துள்ளது உச்சநீதிமன்றம். அவர்கள் எல்லோரும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். நமது ஜனநாயகம் மற்றும் தேர்தல் முறை குறித்து உலகமே பாராட்டி வரும் வேளையில் அவை குறித்து சொந்த நலனுக்காக எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்பி வருகின்றன என்று தெரிவித்தார் . ளோ

மேலும் காங்கிரஸ் கட்சி பட்டியலின பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை பறிக்க தீவிரமான சதியில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மிகவும் தெளிவாக அம்பேத்கர் தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சியும் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நடைமுறைபடுத்த முயற்சித்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள இட ஒதுக்கீடு மாதிரி நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த முயற்சி செய்கிறது.

அங்கு அவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்து கர்நாடகாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் அவர்களின் பொருளாதார நிலையையும் கணக்கில் கொள்ளாமல் அவர்களை ஓபிசி பட்டியலில் சேர்த்துள்ளனர். அவர்களுக்கு இந்திய அரசியல் அமைப்பை பற்றி கவலை இல்லை. பல தசாப்தங்களாக அவர்கள் மக்கள் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. மக்களை வாக்களிக்க கூட அவர்கள் விடவில்லை. தற்பொழுது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக ஏழைகள் நேர்மையான வாக்காளர்கள் பலம் பெற்றுள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற எதிர்க்கட்சிகள் தங்களால் ஆன அனைத்தையும் செய்கிறார்கள் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரிய அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது .அந்த தீர்ப்பில் மீண்டும் பழைய வாக்கு சீட்டு முறைக்கு செல்ல முடியாது. தற்போதைய நடைமுறையை சரியாக தான் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


SOURCE :Dinaseithi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News