ஆப்கானிஸ்தானில் குருத்வாராவை சூறையாடிய தாலிபான்கள்: சீக்கியர்களை சிறைப்பிடித்து அட்டகாசம்!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் குருத்வாராவை சூறையாடி அங்குள்ள சீக்கியர்களையும் சிறைப்பிடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றினர். இதன் பின்னர் அங்குள்ள சிறுபான்மை மக்களை துன்புறுத்தி வருகின்றது தொடர் கதையாக உள்ளது.
By : Thangavelu

இந்நிலையில், தலைநகர் காபூலில் உள்ள சீக்கியர்களின் குருத்வாராவுக்குள் தாலிபான் பயங்கரவாதிகள் நுழைந்து அங்குள்ள சிலைகளை சேதப்படுத்தியுள்ளனர். சீக்கிய மக்களையும் அடித்து, வழிபாட்டு தலங்கள் மற்றும் சின்னங்களை சூறையாடியுள்ளனர்.
அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்துவிட்டு சென்றுள்ளனர். வழிபாட்டிற்காக வந்திருந்த சீக்கியர்களையும் தாலிபான்கள் சிறை பிடித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்துக்கு உலக சீக்கியர் பேரவை தலைவர் புனீத் சிங் சந்தோக் உறுதி செய்துள்ளார்.
இதற்கு முன்னர் சமீபத்தில் ஆப்கான், பக்தியா மாகாணம், சம்கனி பகுதியில் உள்ள குருத்வாராவின் உச்சியில் பறந்த சீக்கியர் கொடியை தாலிபான்கள் அகற்றி அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வாழும் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar