உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த துலிப் மலர் தோட்டம்
காஷ்மீரின் துலிப் மலர் தோட்டம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது.
By : Karthiga
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீ நகரில் உலக புகழ் பெற்ற தால் ஏரியொட்டி இந்திரா காந்தி நினைவு துலிப் மலர் தோட்டம் உள்ளது ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர் தோட்டமான இது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ளது. பல வண்ணங்களில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட துலிப் மலர்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன. இந்த நிலையில் காஷ்மீரின் அடையாளமாக திகழும் துளிப்பு மலர் தோட்டம், உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
தோட்டத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் மலர் வளர்ப்பு தோட்டங்கள் மற்றும் பூங்காக்கள் ஆணையர் செயலாளர் ஷேக் பயாஸ் அகமதுவிடம் உலக சாதனை புத்தகத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, சந்தோஷ் சுக்லா துலிப் மலர் தோட்டம் உலக சாதனை புத்தகத்தில் ஒரு மதிப்பு மிக்க இடத்தை பெற்றதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை வழங்கி கௌரவித்தார்.
SOURCE :DAILY THANTHI