காயமடைந்த தந்தையை சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற சிறுமியின் அசாத்திய திறமை!
காயமடைந்த தன் தந்தையை 35 கிலோமீட்டர் தூரம் ரிக்ஷாவில் வைத்து அழைத்துச் சென்று மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் ஒரு 14 வயது சிறுமி.
By : Karthiga
ஒடிசாவில் பத்ரா மாவட்டத்தில் உள்ள நாடுகள் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பூ நாத். இவர் ஞாயிற்றுக்கிழமை ஒரு கோஷ்டி முதலில் காயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல யாரும் ஆளில்லாத நிலையில் தந்தையை தானே அவரது சரக்கு ரிக்ஷாவில் கூட்டிச் செல்வதற்கு மகள் சுஜாதா சேத்தி முடிவெடுத்தார். தனது கிராமத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாம்நகர் ஆஸ்பத்திரிக்கு தந்தையை சைக்கிள்ரிக்க்ஷாவில் வைத்து சிறுமி ஓட்டிச் சென்றார். ஆனால் அங்கு வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி கூறிவிட்டனர்.
எனவே 35 கிலோமீட்டர் தூரம் பெடலை மிதித்து தந்தையை அங்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு சமூகத்தை திருப்பி கூட்டி சென்று விட்டு ஒரு வாரத்துக்கு பின் அறுவை சிகிச்சைக்கு அழைத்து வரும்படி டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். சிறுமி சுஜாதா அவ்வாறு நேற்று முன்தினம் தந்தையுடன் சரக்குரிகக்க்ஷாவை வீட்டுக்கு திரும்ப ஓட்டி சென்ற போது தான் சில பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் பார்த்து விசாரித்து இருக்கின்றனர் .அதன் பிறகு இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
அப்பாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வாகனம் அமர்த்தும் அளவு என்னிடம் வசதியோ ஆம்புலன்ஸ் அழைப்பதற்கு செல்ஃபோனோ இல்லை எனவே தான் நானே அப்பாவை அவரது சரக்கு ரிக்ஷாவில் வைத்து ஓட்டிச் செல்ல முடிவெடுத்தேன் என்று சாதாரணமாக சொல்கிறார் இந்த சிறுமி. இந்நிலையில் சிறுமியின் செயல் பற்றி அறிந்த குறிப்பிட்ட தொகுதி முன்னாள் இந்நாள் எம்.எல்.ஏக்கள் சிறுமியை நேரில் அனுப்பி அவருக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் என உறுதி அளித்து இருக்கின்றனர்.
SOURCE :DAILY THANTHI