Kathir News
Begin typing your search above and press return to search.

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டிய கிராமம் - புல் விவசாயம் செய்து முன்னேறிய மக்கள்!

புல் விவசாயத்தால் வறுமை நீங்கி வளமையோடு செழித்த கிராமத்தைப் பற்றி காண்போம்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டிய கிராமம் - புல் விவசாயம் செய்து முன்னேறிய மக்கள்!

KarthigaBy : Karthiga

  |  27 Feb 2024 9:52 AM GMT

விவசாயத்தில் லாபம் கிடைப்பதில்லை. விவசாயத்திற்கு போதிய தண்ணீரும் இல்லை என்று பல விவசாயிகள் மனக்குமுறலுடன் இருக்கும் இந்த வேலையில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது ஒரு கிராமம். உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பார்கள். இந்த அத்தனை சோகத்தையும் ஆற்றி தண்ணீர் இன்றி விவசாயம் செய்து உயர்ந்த ஒரு கிராமம் பற்றிய கதை சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளது .அது மகாராஷ்டிரா மாநிலம் 'ஹிவாரே பஜார் 'என்ற கிராமம்தான்.


நாட்டில் உள்ள முன்னேறிய கிராமங்களில் ஒன்றாக புகழ்பெற்றது இந்த கிராமம். 1995க்கு முன்பாக இந்த கிராமத்தில் இருந்த பெரும்பாலான குடும்பங்கள் விவசாய தொழிலை கைவிட்டு நகரத்தில் குடியமர தொடங்கினார்கள். காரணம் கிராமத்தில் போதிய வருமானம் ஈட்ட முடியவில்லை .விவசாயத்தில் லாபம் இல்லை .விலைய வைப்பதற்கு தண்ணீரும் பற்றாக்குறை. இதைப் போக்க என்ன வழி என்பது பற்றி ஊர்மக்கள் கூடிய ஆலோசித்து சில மாற்றங்களை சாத்தியப்படுத்தினர். தண்ணீர் அதிகம் செலவிடாமல் என்ன விளைவிக்க முடியும் என்பது தான் அவர்களுக்கு இருந்த ஒரே சவால். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த ஒரே மாற்று வழி புல் விவசாயம் .


நகர்புரத்தின் பால் தேவை, கால்நடைகளுக்கான உணவு தேவைக்கு மாட்டு தீவனப்புல் அத்தியாவசியம் என்பதால் கிராமத்தின் அத்தனை இடங்களிலும் புல்விளைய வைத்து அதை ஏற்றுமதி செய்வதை தொழிலாக ஒற்றுமையுடன் செய்ய ஆரம்பித்தனர். இன்று அந்த கிராமத்தில் 54 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோடீஸ்வரர்களாக உள்ளனர் .கிராம மக்களின் சராசரி வருவாய் 1995 உடன் ஒப்பிடும்போது 20 மடங்கு உயர்ந்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. பிரதமர் மோடி இந்த கிராமம் பற்றி 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பெருமிதத்துடன் பாராட்டியுள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News