இந்தியா இலங்கை இடையே பாலம் அமைக்கும் பணி- மத்திய அரசு தீவிரம்!
இந்தியா, இலங்கை இடையே பாலம் அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
By : Karthiga
இந்தியா, இலங்கை இடையே பாலம் அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாவையும், பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மற்றொரு முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்தியா – இலங்கை இடையே பாலம் அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டின் தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னாரை இணைக்கும் வகையில் கடலின் குறுக்கே 23 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும்“ 23 கி.மீ நீளமுள்ள புதிய ராமர் சேது பாலம், இந்தியாவின் தனுஷ்கோடியை இலங்கையின் பாக் ஜலசந்தி வழியாக இணைக்கும் சேதுசமுத்திரம் திட்டம், போக்குவரத்துச் செலவை 50 சதவீதம் குறைத்து, இலங்கைத் தீவை இணைக்க உதவும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) இந்த திட்டம் செயல்படுத்தப்படும்” என்றும் தெரிவித்தனர்.
6 மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தம் ரூ.40000 கோடி வளர்ச்சிக்கு வழிவகுத்தது என்று தெரிவித்த அதிகாரிகள் இதில் புதிய ரயில் பாதைகள், மற்றும் ராமர் சேது பாலம் உள்ளிட்ட திட்டங்கள் அடங்கும். இது தொடர்பான ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்தனர்.
SOURCE :NEWS