2028 ஆம் ஆண்டுக்குள் 'பாரத் விண்வெளி நிலையம்' அமைக்கும் பணி தொடக்கம் நிச்சயம்- இஸ்ரோ தலைவர் சோம்நாத்!
இந்தியாவின் முதல் சர்வதேச விண்வெளி நிலையமான பாரத் விண்வெளி நிலையம் அமைக்கும் பணி 2028- ஆம் ஆண்டுக்குள் தொடங்கும் என்று இஸ்ரோ தலைவர் அறிவித்துள்ளார்.
By : Karthiga
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வருகிற 2028 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தை தொடங்குவதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் இதற்கான அறிவிப்பை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த பாரதிய வித்யான் சம்மேளன கூட்டத்தில் வெளியிட்டுள்ளார். அப்போது அவர் கூறும் போது ,குறிப்பாக அடுத்த ஐந்து ஆண்டுக்குள் எட்டு டன் எடையுள்ள ரோபோ திறன்களை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் தொகுதியை இஸ்ரோ நிலை நிறுத்த திட்டமிட்டுள்ளது.
பாரத் விண்வெளி நிலையம் என குறிப்பிடப்படும் இந்த லட்சியத் திட்டப்பணிகள் வருகிற 2028 ஆம் ஆண்டு தொடங்கப்படும். தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்தி 20 முதல் 1715 டன்கள் வரை சுமந்து செல்லும் திறன் கொண்ட புதிய ராக்கெட் உருவாக்க உள்ளோம். தற்போதைய இந்திய ராக்கெட்டுகளால் பத்து டன் எடையுள்ள செயற்கைக்கோள்கள் மற்றும் கருவிகளைக் கொண்டு செல்ல முடியும். 2035 ஆம் ஆண்டிற்குள் சர்வதேச விண்வெளி நிலைய பணியின் ஒரு பகுதியாக விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்துடன் எதிர்காலத்தில் இஸ்ரோ பணிகள் ஒரு மூலக்கல்லாக சர்வதேச விண்வெளி நிலைய பணி அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் சூரிய வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் ஒன் விண்கலம் ஜனவரி 6 ஆம் தேதி எல்1 புள்ளியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் விண்கலம் எல் ஒன் புள்ளியை மிக அருகில் நெருங்கி உள்ளது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
SOURCE :DAILY THANTHI