Kathir News
Begin typing your search above and press return to search.

ஓய்வூதிய நிதியில் ரூபாய் 70 லட்சம் திருட்டு - எல்லை பாதுகாப்பு படை 'மோசடி மன்னன்' கைது!

பணி நீக்கம் செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் ஓய்வூதிய நிதியில் ரூபாய் 70 லட்சத்தை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓய்வூதிய  நிதியில் ரூபாய் 70 லட்சம் திருட்டு - எல்லை பாதுகாப்பு படை மோசடி மன்னன் கைது!

KarthigaBy : Karthiga

  |  1 March 2023 12:00 PM GMT

மோசடி மன்னனாகவே வலம் வந்துள்ள கன்ஷ்யாம் யாதவ் என்ற அந்த நபர் உத்தரபிரதேசத்தின் காஜிபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் . மேற்கு வங்காள மாநிலத்தின் மால்டாவில் எல்லை பாதுகாப்பு படையில் வீரராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அனுமதி இன்றி வேலைக்கு செல்லாமல் இருந்ததற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். கனஷ்யாம் யாதவ் என்ற அந்த நபர் உத்திரபிரதேசத்தின் காஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மேற்கு வங்காள மாநிலத்தின் மால்டாவில் எல்லை பாதுகாப்பு பணியில் வீரராக பணிபுரிந்து வந்தார் .

இந்நிலையில் அனுமதி இன்றி வேலைக்கு செல்லாமல் இருந்ததற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். பணியில் இருந்தபோது தேசிய ஓய்வூதிய திட்ட இணையதளத்தின் மூலம் ஓய்வூதிய நிதியில் ரூபாய் 70 லட்சத்தை திருடியுள்ளார். 69 எல்லை பாதுகாப்பு படையினரின் நிரந்தர ஓய்வூதிய கணக்கில் இருந்து 89 வரை கட்டண பரிமாற்றம் மூலம் அவர் அந்த தொகையை திருடி இருக்கிறார் .

இந்த மோசடி அம்பலமானதை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையின் சம்பளம் மற்றும் கணக்கு பிரிவு போலீசில் புகார் அளித்தது. அதன் அடிப்படையில் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் பொய்யான பெயரில் வசித்து வந்த கன்ஷ்யாமை டெல்லி போலீஸ் கைது செய்தனர். பிரயாக் ராஜில் அவர்தான் உத்திரபிரதேச போலீசில் பணிபுரிவதாக கூறி அதற்கான சீருடையில் டிப்டாப்பாக ஆக வலம் வந்துள்ளார். தனது காரிலும் உத்தர பிரதேச போலீஸ் ஸ்டிக்கரை ஒட்டி இருக்கிறார். ஏற்கனவே திருமணம் ஆகி மூன்று குழந்தைகளுக்கு தந்தையான கன்ஷ்யாம் அதை மறைத்து பிரயாக்ராஜில் மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.

வெள்ளை பாதுகாப்பு படையினரின் ஓய்வூதிய கணக்கில் இருந்து திருடிய பணத்தில் தான் காரரை வாங்கி இருக்கிறார் . புத்திசாலித்தனமாக உடன் வசிக்கும் பெண்ணின் பெயரில் அந்த காரை வாங்கி உள்ளதும் தெரிய வந்திருக்கிறது . அந்த பெண் மற்றும் இறந்துவிட்ட தனது மாமனாரின் பெயரிலேயே கன்ஷ்யாம் ஓய்வூதிய மோசடி குற்றத்தை அரங்கேற்றி இருக்கிறார் . போலீசார் அவரின் மூன்று வங்கி கணக்குகளை முடக்கி இருக்கின்றனர்.


கன்ஷ்யாமின் குற்ற வரலாறு இத்துடன் முடிந்துவிடவில்லை. எல்லை பாதுகாப்பு பணியில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒருவரிடம் பெருந்தொகை பெற்றுக் கொண்டு பொய்யான பணி நியமன கடிதம் கொடுத்ததாக டெல்லியில் ஏற்கனவே ஒரு வழக்கில் கன்ஷ்யாம் தேடப்பட்டு வருகிறார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News