வேலை வாய்ப்புக்கு பஞ்சம் இல்லை! ஆனால் திறமையான ஆட்களுக்குத்தான் பஞ்சம்!! மத்திய அமைச்சர் சந்தோஷ்கங்வார்!!
வேலை வாய்ப்புக்கு பஞ்சம் இல்லை! ஆனால் திறமையான ஆட்களுக்குத்தான் பஞ்சம்!! மத்திய அமைச்சர் சந்தோஷ்கங்வார்!!
By : Kathir Webdesk
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கலந்து கொண்டார். அப்போது அவர் வேலைவாய்ப்புகளில் வட இந்தியர்கள் கூடுதல் திறமை பெறவேண்டும் என்ற பொருள்படும் வகையில் பேசினார்.
இதனையடுத்து வேலைவாய்ப்பு குறித்து வட இந்திய இளைஞர்களையும் பெண்களையும் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் அவமதித்து விட்டதாகவும், பொருளாதார மந்த நிலைக்கான காரணத்தை தவிர்ப்பதற்காக இந்த கூற்றை பயன்படுத்துவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதற்கு மறுப்பு தெரிவித்து அவர் கூறியதாவது: நாடு முழுவதிலும் வேலைவாய்ப்பிற்கு பஞ்சம் இல்லை. அதே நேரத்தில் வேலை வாய்ப்பை அளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தகுதியுடைய நபர்களை கண்டு பிடிக்க முடியவில்லை என்று கூறுகின்றனர். தற்போதைய மத்திய அரசு இளைஞர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் விதமாக அவர்களுக்கு திறன் பயற்சி அளித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையை ஒவ்வொரு நாளும் தன்னுடைய அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது என கூறினார்.
https://www.dinamalar.com/news_detail.asp?id=2368083