“இனி தப்ப முடியாது; ப.சிதம்பரத்துக்கு திகார் ஜெயில் உறுதி” - அமலாக்கத்துறை வழக்கிலும் கைதாகிறார்!!
“இனி தப்ப முடியாது; ப.சிதம்பரத்துக்கு திகார் ஜெயில் உறுதி” - அமலாக்கத்துறை வழக்கிலும் கைதாகிறார்!!
By : Kathir Webdesk
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ கைது செய்தது. அவர், சி.பி.ஐ விசாரணையில் உள்ளார். சி.பி.ஐ.யை தொடர்ந்து இந்த மோசடி வழக்கில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். டெல்லி உயர்நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது.
இதையடுத்து ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று நீதிபதிகள் பானுமதி, போபண்ணா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அவர்கள், ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டனர்.
அந்த தீர்ப்பில் நீதிபதிகள், “இந்த வழக்கு சரியான பாதையில் செல்கிறது. முன்ஜாமின் என்பது அடிப்படை உரிமை கிடையாது. வழக்கு தொடக்க நிலையில் உள்ளது. இந்த நிலையில் முன்ஜாமின் வழங்கினால், அது விசாரணையை பாதிக்கும். இதனால், இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்க இயலாது. பொருளாதார குற்றங்களை வேறு வழியில்தான் கையாள வேண்டும். விசாரணை அமைப்புகளுக்கு ப.சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டனர்.
சி.பி.ஐ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் விசாரணைக் காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்ததாக அவரை அமலாக்கத்துறையும் கைது செய்ய தயாராகி வருகிறது.
இதன் மூலம் ப.சிதம்பரம் இனி தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு திகார் ஜெயில் உறுதி என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.