"எப்படி திட்டம் போட்டு சரக்கு கடத்தினாலும் எங்களிடம் இருந்து தப்பிக்க வழி இல்லை": கெத்து காட்டி பிடித்த போலீசார்!
ஆட்டோவில் வந்த இருவர் சந்தேகத்தின் பெயரில் போலீசாரிடம் பிடிபட்டனர். இறுதியில் அவர்கள் சாராயம் கடத்தியது தெரியவந்தது.
By : Karthiga
கடலூர் துறைமுகத்தில் போலீசார் பச்சையாங்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆட்டோ ஒன்று சென்றது அந்த ஆட்டோவை சந்தேகத்தின் பெயரில் போலீசார் மடிக்க பிடித்தனர் ஆட்டோவில் உள்ளவர்களை விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின்னாக முரண்பாடு உடன் கூடிய பதிலை போலீசாருக்கு தகவலாக தெரிவித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் முழுமையாக ஆட்டோவை பரிசோதனை செய்தனர். அதில் ஆட்டோவில் தகடு ஒன்று இருப்பது தெரியவந்தது. அந்த தகடை அகற்றிப் பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அந்த தகட்டினுள் ஒரு சிறு பெட்டி ஒன்றை மறைத்து வைத்து அதனுள் சாராய பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டையை கடத்திச் சென்றுள்ளனர். ஆட்டோவில் வந்த இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கடலூர் புது வண்டி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் ஆட்டோவில் புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்திற்கு சாராயத்தை கடத்தியதும் தெரியவந்தது. இதனால் போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இப்படி பல நூதன முறைகளை கண்டுபிடித்து அதன் வழியாக எல்லாம் சாராயத்தை கடத்தி செல்வது கடத்தல்காரர்களுக்கு எளிதாகிவிட்டது.