'நாட்டு மக்களுக்காகவே சிந்திக்கிறார் பிரதமர் மோடி' - பாராட்டி தள்ளிய இம்ரான்கான்!
By : Thangavelu
பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூரில் நடைபெற்ற பேரணி ஒன்றில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மறுபடியும் பாராட்டி பேசிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து அவர் மேலும் பேசும்போது, அமெரிக்காவின் நண்பனாக காட்டிக்கொள்ளும் இந்தியா, ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கையாண்டு வருகிறது. பொருளாதார தடைகளை உடைத்து ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது.
இந்தியாவின் முடிவுகள் அனைத்து மக்களின் முன்னேற்றத்தின் அடிப்படையாக கொண்டுள்ளது. ஆனால் நமது நாட்டின் கொள்கை ஒரு சிலரின் முன்னேற்றத்திற்கு மட்டுமே கொண்டவையாக உள்ளது.
மேலும், பாகிஸ்தானில் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை நான் பின்பற்றி வந்தேன். இதனால்தான் ஆட்சியை விட்டு இறங்க வேண்டி சூழ்நிலை ஏற்பட்டது. நம் மக்களுக்காக சிந்திப்பது சர்வதேச சக்கதிகளுக்கு பிடிக்காமல் போயிற்று என்றார். ஆனால் இவர் மறைமுகமாக சாடுவது அமெரிக்காவைத்தான் என்று அனைவரும் அறிந்ததே.
Source: Daily Thanthi
Image Courtesy:Times Of India