ஏழுமலையான் தங்கத்தை மாநில அரசிடம் அடகு வைத்தது உண்மையா? தேவஸ்தானம் தகவல் என்ன?
ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கம் மற்றும் ரொக்கம் ஆகியவை அரசு வங்கியில் டெபாசிட் செய்யப் பட்டுள்ளது.
By : Bharathi Latha
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏழை, எளிய பக்தர்கள், நடுத்தர பக்தர்கள், பணக்காரர்கள் ஆகியோர் எந்த பாகுபாடும் என்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவரவர் தங்கள் நிலைக்கு ஏற்றவாறு காணிக்கையை செலுத்துகின்றனர். ஏழுமலையானுக்கு பணம், தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நிலம் போன்ற பல்வேறு வடிவங்களில் எண்ணற்ற சொத்துக்கள் இருப்பது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் தங்கத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட் செய்கிறது.
ஆனால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட் என்று பெயரில் மாநில அரசிடம் தங்கத்தை அடகு வைப்பதாக தவறான தகவல் பரவி வருகிறது. அதற்கு பதில் அளித்த தேவஸ்தான முதன்மை செயலாளர் தர்மா ரெட்டி, திருப்பதி திருமலை தேவஸ்தானம் மீது யாரோ சிலர் தவறான செய்திகளை பரப்புவது ஏற்படுவது அல்ல என்று எச்சரித்தார். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தங்கும் மொத்தம் 10,258.38 கிலோ கிராம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளில் ஏழுமலையானின் ரொக்க டெபாசிட் வெகுவாக அதிகரித்து உள்ளது. ஜூன் மாதம் 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி 13 ஆயிரத்து 25 கோடி ரொக்கம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. தற்போது 15 விருது 938 கோடி ரொக்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி தங்கம் கையிருப்பு 7,339. 74 கிலோ கிராம் ஆக இருந்தது. ஆனால் தற்பொழுது அது 10 ஆயிரத்து 258.37 கிலோ கிராம் ஆக உள்ளது என்கிறார். மேலும் ஏழுமலையானின் தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை அதிக வட்டி தரும் தேசிய பயமாக்கப்பட்ட வங்கிகளில் தான் டெபாசிட் செய்யப்படுகிறது என்று தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: NDTV News