Kathir News
Begin typing your search above and press return to search.

திருமலையில் அள்ளும் கூட்டம் - 8 மணி நேரம் ஆகும் ஏழுமலையான் தரிசனம்

அதிக பக்தர்கள் வருகையின் காரணமாக திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய 8 மணி நேரம் தாமதம் ஆகிறது.

திருமலையில் அள்ளும் கூட்டம் - 8 மணி நேரம் ஆகும் ஏழுமலையான் தரிசனம்
X

Mohan RajBy : Mohan Raj

  |  9 May 2022 6:30 PM IST

அதிக பக்தர்கள் வருகையின் காரணமாக திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய 8 மணி நேரம் தாமதம் ஆகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்துக்கு குவிந்து வருகின்றனர், தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பக்தர்கள் தரிசன டிக்கெட் முன்பதிவு இல்லாமல் உள்ளே ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

கையில் ஆதார் கார்டு வைத்திருந்தால் போதும் முன்பதிவு டிக்கெட் இல்லாமல் கோவில் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 25 அறைகளில் பக்தர்கள் காக்க வைக்கப்பட்டு பின்னர் இலவச தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.


பக்தர்கள் காத்திருக்கும் அறையில் உணவு, பால், குடிநீர் போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 300 ரூபாய்க்கு ஆன்லைன் தரிசனம் டிக்கெட் பெற்றவர்கள் தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.

இந்த நிலையில் கீழிருந்து நடைபாதை வழியாக ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக பக்தர்கள் செல்கின்றனர் கோடை விடுமுறை என்பதால் ஏழுமலையானை தரிசிக்க கூட்டம் குவிந்து வருவதால் திருமலையில் மக்கள் வெள்ளமாக காட்சி அளிக்கிறது.

திருப்பதியில் நேற்று 75,876 பேர் தரிசனம் செய்தனர். 32,264 பேர் முடிகாணிக்கை செய்தனர். 4.4 6 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News