இஸ்ரோ செல்லும் அரசு பள்ளி மாணவிகள்: செயற்கைக்கோள் ஏவுவதை பார்வையிட கிடைத்த அனுமதி!
இஸ்ரோ செல்லும் அரசு பள்ளி மாணவிகள் செயற்கைக்கோள் ஏவுவதை பார்வையிட கிடைத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
By : Bharathi Latha
திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சென்னை ப்ளீஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஆகஸ்ட் மாதம் ஆசாதி சாட் ஒன் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. ஆனால் ராக்கெட் வெளி மாறியதால் வெற்றிகரமாக சேர்க்கவில்லை. அதன் தொடர்ச்சியாக தற்போது அதை நிறுவனத்துடன் இணைந்து ஆசாதி சாட் தயாரிக்கும் பணியில் இந்தியாவிலுள்ள பல்வேறு மாணவிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
அதில் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இணைந்து 50 கிராம் எடையுள்ள போலோடு தயார் செய்து இஸ்ரோவிற்கு அனுப்பி இருக்கிறார்கள். தற்பொழுது அந்த போலோடு ஆசாதி சாட் 2 பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த செயற்கைக்கோள் செலுத்தும் 10 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. இந்த தயாரிப்பானது அரசு பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் படி தயாரிக்கப்பட்டது.
மாணவிகள் செயற்குழு நிகழ்ச்சிகளை நேரில் பார்க்க தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக அவர்கள் இஸ்ரோ செல்ல இருக்கின்றார்கள். இதற்கு இடையே திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பதினோராம் வகுப்பு மாணவி முருகேஸ்வரி சிவகங்கை குடியரசு தின விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு குத்துச்சண்டை போட்டியில் 50 கிலோ எடை மற்றும் பிரிவில் வெண்கல ப்பதக்கம் வென்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Maalaimalar