Kathir News
Begin typing your search above and press return to search.

“இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல, காஷ்மீர்” என்று கூறிய திருமாவளவன், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவாரா?

“இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல, காஷ்மீர்” என்று கூறிய திருமாவளவன், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவாரா?

“இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல, காஷ்மீர்” என்று கூறிய திருமாவளவன், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவாரா?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Aug 2019 10:55 AM GMT



காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட தனி அந்தஸ்து மூலம், அங்குள்ள சுமார் 11 லட்சம் பட்டியலின மக்கள், காஷ்மீரின் இரண்டாம் தர குடி மக்களாக ஆக்கப்பட்டனர். அவர்களுக்கு காஷ்மீர் அரசு வேலை வாய்ப்பில் இடமில்லை. அவர்களின் பிள்ளைகளுக்கு தொழில்நுட்ப கல்லூரிகளில் படிக்க அனுமதி கிடையாது. சட்ட கல்லூரிகளில் அவர்களின் பிள்ளைகள் படிக்க அனுமதி கிடையாது.


உள்ளாச்சி தேர்தல்களில் ஓட்டு உரிமை கிடையாது. சட்டசபை தேர்தல்களில் ஓட்டுரிமை கிடையாது. இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள பட்டியலின மக்களுக்கான எந்த சலுகையும் காஷ்மீரில் உள்ள பட்டியலின மக்களுக்கு கிடையாது.


காலம் காலமாக அவர்கள் மலம் அள்ளும் தொழில் மட்டுமே செய்து வந்துள்ளனர். வேறு வேலைகளில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.


தங்களுக்கும் சம உரிமை கேட்டு 1957-ஆம் ஆண்டு அங்குள்ள பட்டியலின மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக காஷ்மீர், ஜம்மு பகுதிகள் குப்பை மேடாயின. ஆனாலும் அவர்களுக்கு எந்த உரிமையும் கடைசி வரை வழங்கப்படவில்லை.


அதற்குப் பதிலாக அண்டை மாநிலமான பஞ்சாப்பின் குர்தாஸ்பூர், அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் இருந்து துப்புரவு தொழிலாளர்களை கொண்டு வந்து குப்பைகளையும், மலத்தையும் அள்ளினர். இப்படித்தான் பட்டியலின மக்களின் உரிமை போராட்டம் நசுக்கப்பட்டது. அதன்பிறகு, பஞ்சாபில் இருந்து அழைத்து வரப்பட்ட பட்டியலின மக்களுக்கும், உரிமைகள் மறுக்கப்பட்டன.


இந்த அடக்குமுறை, ஒடுக்குமுறைகளையும் தாண்டி அங்குள்ள பட்டியலின மக்களில் பலர் முதுகலை வரை படித்துள்ளனர். ஆனால் அவர்களால் குப்பை அள்ளும் வேலை, மலம் அள்ளும் வேலையைத்தவிர வேறு எந்த அரசு வேலையிலும் சேர முடியவில்லை.


இதுதான் தனி அந்தஸ்தால், காஷ்மீரில் உள்ள பட்டியலின மக்களின் உண்மை நிலை. ஆமாம் காஷ்மீரின் அந்தபுரம் இவ்வளவு கேவலமானதாக நாறியது 307 சட்டப்பிரிவால்.


இந்தியா முழுவதும் பட்டியலின மக்களுக்கு என்னென்ன சலுகைகள், இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுகிறதோ அவை அனைத்தும் காஷ்மீரில் உள்ள பட்டியலின மக்களுக்கு தனி அந்தஸ்த்தின் காரணமாக இதுவரை மறுக்கப்பட்டு வந்துள்ளது. இதுதான் கொடுமையிலும் கொடுமை.


மொத்தத்தில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தின் கீழ் அங்குள்ள பட்டியலின மக்கள், அடிமைகளாகவும், ஒடுக்கப்பட்டவர்களாவும் இதுவரை வாழ்ந்து வந்துள்ளனர்.


மோடி அரசு துணிந்து 370, 35ஏ ஆகிய சட்ட பிரிவுகளை ரத்து செய்ததால், நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் அவர்கள் அடிமைதளையில் இருந்து விடுபட்டுள்ளனர். அங்குள்ள பட்டியலின மக்களுக்கு இப்போதுதான் சுதந்திரம் கிடைத்துள்ளது.


இதை, காஷ்மீரில் உள்ள ஒட்டு மொத்த பட்டியலின மக்களும் கொண்டாடி மகிழ்கின்றனர். மனித இதயம் கொண்ட அனைவரும் இந்த மகத்தான வரலாற்று நிகழ்வை வரவேற்கின்றனர்.


ஆனால் பட்டியலின மக்களை வைத்து பிழைப்பு நடத்திவரும் திருமாவளவன், இதை கடுமையாக எதிர்க்கிறார். என்ன ஆதாயத்திற்காக அவர் இதை எதிர்க்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் இதன் மூலம் அவர், காஷ்மீர் மாநில பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துள்ளார்.


இது ஒருபுறம் இருக்க, இப்போது திருமாவளவன் இந்திய இறையாண்மைக்கு, இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பிரிவினையை தூண்டும் வகையில் கருத்துகூறி உள்ளார். இது அனைத்து தேச பக்தர்களையும் அதிர்ச்சியடையச் செய்கிறது.






“இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல, காஷ்மீர்” என்று கூறியுள்ளார் திருமாவளவன். இது மிகவும் ஆபத்தான பிரிவினைவாதம்.


இந்தியாவின் எம்.பியாக, பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட திருமாவளவன், “இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிய அல்ல காஷ்மீர்” என்று கூறியிருப்பது முற்றிலும் இந்திய இறையாண்மைக்கு எதிரானது. எனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவர் கைது செய்ய வேண்டும் என்பதே இந்த தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனின் கோரிக்கையாக உள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News