Kathir News
Begin typing your search above and press return to search.

குவாட்டர் கேட்டு மிரட்டிய திருமாவளவன் கட்சி மாநில நிர்வாகி! “வெச்சி செஞ்ச” டாஸ்மாக் ஊழியர்! வைலானது ஆடியோ!!

குவாட்டர் கேட்டு மிரட்டிய திருமாவளவன் கட்சி மாநில நிர்வாகி! “வெச்சி செஞ்ச” டாஸ்மாக் ஊழியர்! வைலானது ஆடியோ!!

குவாட்டர் கேட்டு மிரட்டிய திருமாவளவன் கட்சி மாநில நிர்வாகி! “வெச்சி செஞ்ச” டாஸ்மாக் ஊழியர்! வைலானது ஆடியோ!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Sep 2019 4:46 AM GMT



கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு ஆடியோ பதிவு வைரலாகி வருகிறது.


அந்த ஆடியோ பதிவவில், ஒரு டாஸ்மாக் சூப்பர்வைசருக்கும், திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவருக்கும் நடந்த உரையாடல் இடம் பெற்று உள்ளது.


கைபேசியில் பேசுகின்ற நபர், “எனது சகலை செத்துப் போய்விட்டார். நான் உங்களிடம் டொனேஷன் எதுவும் கேட்கவில்லை. ஒரு நாலு குவாட்டர் மட்டும் கொடுத்து விடுங்கள். நான் வெளியில் வண்டியில் நிற்கிறேன்” என்கிறார்.


“நீங்கள் யார்? என்னவென்றே எனக்கு தெரியாது. திடீரென்று நாலு குவாட்டர் கொங்க என்று கேட்டால், எப்படிங்க கொடுக்கிறது?” என்று கேட்கிறார் அந்த டாஸ்மாக் சூப்பர்வைசர்.


“நண்பா பாத்தியா? இதுதான் அருமையான விஷயம். நான் யார் என்று அட்டென்டரிடம் கேளுங்கள். அல்லது சேல்ஸ்மேனிடம் கேளுங்கள்... ஆகஸ்ட்-14 திருமாவளவனின் பிறந்தநாள் விழா. அதை முடித்துவிட்டு கேட்கிறோம். உங்களுடைய விருப்பப்படி கொடுங்கள்” என்று திருமாவளவன் பிறந்தநாள் விழாவை பயன்படுத்தி கேட்கிறார்.


“அதெல்லாம் ஒன்றும் பண்ண முடியாதுங்க” - இது சூப்பர்வைசர்


“நண்பா நாலு குவாட்டர் உனக்கு பெரிய விஷயமா?” - இது விசிக நிர்வாகி.


“எங்களுக்கு இது பெரிய விஷயம்தான்” என்கிறார் சூப்பர்வைசர்.


“சரிங்க, என்ன பண்ணுவீங்க... சொல்லுங்க... இல்ல என்ன பண்ண முடியும் என்று கேட்டேன்” என்கிறார் விசிக நிர்வாகி.


“எங்களால் எதுவும் பண்ண முடியாதுங்க”


“நண்பா முடிந்ததை பண்ணு நண்பா”


“எங்களால் எதுவும் பண்ண முடியாதுங்க”


“நண்பா, என்கிட்ட இப்படியே பேசிட்டு இருக்காத. தயவுசெஞ்சு. பிஎம் கிட்ட என்னை யாருன்னு கேட்டுப்பாருங்க. இளமாறன் எனது பெயர். விசிக மாநில துணை பொது செயலாளர்.”


“அதுக்காக நாங்க எப்படிங்க கொடுக்க முடியும்?”


“அண்ணா... சரி மூணு மட்டும் கொடுண்ணா”


“எங்களால எதுவுமே தர முடியாதுங்க. எப்படிங்க கொடுக்கிறது?”


“என்னண்ணா இப்படி பேசுறீங்க?”


“ரெண்டு மட்டுமாவது கொடுங்க”


“இல்லங்க எதுவுமே தர முடியாதுங்க. கடையில எதுவும் தர மாட்டாங்க. நான் வந்துட்டு இருக்கிறேன். நான் வந்த பிறகு வேணும்னா நேர்ல பேசிக்கலாம்.”


“நான் சாவுக்கு போகணும்”


“அதுக்கு நாங்க என்னங்க பண்றது?”


“அப்படியா?”


“ஏம்பா நான் ரெண்டு மட்டும் கொடுங்கிறேன்”


“ஒன்னு கூட தர முடியாதுங்க”


“தர முடியாதா?”


“என்ன நடக்கும்னு பாக்றீயா?”


“என்ன சொன்னீங்க?”


“ஏன் இதுக்கு போய் நாம வாக்குவாதம் பண்ணிகிட்டு... நண்பா, இரண்டு மட்டும் கொடுக்க சொல்லு”


“எதுவும் கொடுக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டேன்”


“ஓ... கொடுக்கக் கூடாது என்பது உன்னுடைய அதிகாரம்.. ரைட்டா? அதோடு நின்னுகிடணும்...”


“சரி”


“அவ்வளவு பெரிய பு... யா நீயீ?”


“மரியாத..”


“மரியாதை பு... கொடுத்துதான் பேசினேன் பஸ்ட்”


“ஒரு குவாட்டருக்கு பிச்சை எடுக்கிற, உனக்கு என்ன அவ்வளவு அதிகாரம்?”


கெட்ட வார்த்தையுடன் போன் கட்...




https://www.youtube.com/watch?v=lKh3HYZ9Ezo


ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. திருமாவளவன் கட்சியின் யாரும் வேலைக்கு செல்வதில்லை. கட்ட பஞ்சாயத்து, அடிதடி, அடவாடி, கலவரம் இதைதான் முழு நேர தொழிலாக செய்து வருகின்றனர்.


அதாவது, திருமாவளவன் தனது தம்பிகளை நன்கு படிக்க வைத்து, அரசு பணிகளோ அல்லது தனியார் துறைகளிலோ வேலைக்கு அனுப்ப வில்லை. அல்லது மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய சொல்லிக்கொடுக்க வில்லை என்பதே அப்பட்டமான உண்மை.


டாக்டர் கிருஷ்ண சாமியைப் போன்று தனது சமுதாய மக்களின் உண்மையான முன்னேற்றத்தில் திருமாவளவனும் அக்கறை கொண்டால், அந்த சமுதாயத்திற்கு நல்லது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News