Kathir News
Begin typing your search above and press return to search.

“ஈயம் பூசுனமாதிரியும் இருக்கணும்; பூசாதமாதிரியும் இருக்கணும்” - திருமாவளவனின் பித்தலாட்டம் அம்பலம்!

“ஈயம் பூசுனமாதிரியும் இருக்கணும்; பூசாதமாதிரியும் இருக்கணும்” - திருமாவளவனின் பித்தலாட்டம் அம்பலம்!

“ஈயம் பூசுனமாதிரியும் இருக்கணும்; பூசாதமாதிரியும் இருக்கணும்” - திருமாவளவனின் பித்தலாட்டம் அம்பலம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Nov 2019 11:36 AM GMT


விடுதலைப்புலிகளையும், இலங்கைத் தமிழர்களையும் வைத்து பிழைப்பு நடத்தும் தமிழக அரசியல்வாதிகளில் திருமாவளவன் முக்கியமானவர். இவர், விடுதலைப் புலிகளை அழித்து ஒழிப்பதற்கும், 1,75,000 அப்பாவி இலங்கை தமிழர்களை கொன்று குவிப்பதற்கும் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியுடன் கொஞ்சம் கூட சொரணையே இல்லாமல் கூட்டணி வைத்து எம்பியாக தேர்வானார்.


வெற்றி பெற்ற பிறகு, விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக திருமாவளவன் தொடர்ந்து நாடகமாடி வந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலையாளிகள், பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.


இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கு பாதுகாப்பு மாற்றியமைக்கப்பட்டது தொடர்பான பிரச்சினையை பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எழுப்பியது. இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டது.


அப்போது பாராளுமன்றத்தில் பேசிய திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, “விடுதலைப்புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த உச்சபட்ச பாதுகாப்பான எஸ்.பி.ஜி பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும்” என்று உரத்த குரலில் முழங்கினார்.


விடுதலைப் புலிகளால் இன்னமும் சோனியா காந்தி உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று பாராளுமன்றத்தில் டி.ஆர்.பாலு ஒப்பாரி வைத்தபோது, அதே அவையில்தான் திருமாவளவனும், அவரது கட்சியைச் சேர்ந்த ரவிக்குமாரும் அமர்ந்து இருந்தனர். அவர்கள் டிஆர்.பாலுவின் பேச்சுக்கு எந்த வகையிலும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. கண்டித்து குரல் எழுப்பவும் இல்லை. அமைதியாக இருந்து ஆதரவு தெரிவித்தனர்.


இல்லாத விடுதலைப்புலிகளை இருப்பதாக சொல்லி, அதன் மூலம் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அப்பட்டமான ஒரு மோசடி பொய்யை, பாராளுமன்றத்தில் திமுக முன்வைத்தது தமிழர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


திருமாவளவன் மற்றும் அவரது கட்சியினரின், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்ற முகத்திரை கிழிக்கப்பட்டு உள்ளது. இதனால் திருமாவளவன் ஒரு பித்தலாட்டத்தை தனது அடிமை தம்பிகளில் ஒருவரான வன்னி அரசு மூலம் அரங்கேற்றியுள்ளார்.


வன்னி அரசு தனது ட்விட்டர் பக்கத்தில், “விடுதலைப்புலிகளை அழித்து விட்டதாக அறிவித்த பிறகு விடுதலைப் புலிகளை வைத்து பாதுகாப்பு கேட்பது நாகரீகமா?” என்று ஈயம் பூசியதை போலவும், பூசாதது போலவும் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.




https://twitter.com/VanniArasu_VCK/status/1197389288280752128


திருமாவளவனின் பித்தலாட்டத்தின் உச்சம் என்னவென்றால், இதனை ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி, திமுக ஆகியவற்றிற்கு “டேக்” செய்து உள்ளார். அதாவது, காங்கிரசையோ, திமுகவையோ கண்டிக்கவில்லை, தமிழர்களை ஏமாற்றுவதற்காகவே இந்த நாடகம் என்பதை உணர்த்தி உள்ளனர்.


உண்மையில் காங்கிரசையும் கண்டிக்கவில்லை திமுகவையும் கண்டிக்கவில்லை. ஆனால் தமிழர்களை முட்டாள்கள் என நினைத்து, காங்கிரசையும், திமுகவையும் கண்டித்தது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி பித்தலாட்டம் செய்துள்ளார் திருமாவளவன்.


இதோடு திருமாவளனின் பித்தலாட்டம் நிறைவு பெறவில்லை. இலங்கையில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்கே முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வருகிறார். அவருக்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு அந்த அழைப்பை திரும்பப்பெற வேண்டும் என்று அடுத்த பித்தலாட்ட நாடகத்தையும் திருமாவளவன் அரங்கேற்றி உள்ளார்.


https://twitter.com/thirumaofficial/status/1197157477651042304/photo/1


“வலிக்காத மாதிரி கூட அடிக்க வேண்டாம், இப்போதெல்லாம் வலிக்காம அடிக்கிறமாதிரி கனவு கண்டாலே போதுமல்லவா?” என்று பாலமுருகன் என்பவர் பதிவிட்டு, திருமாவளவனின் முகத்திரையை கிழித்து உள்ளார்.




https://twitter.com/mayilbalan/status/1197500524418875398


திருமாவளவன் வேண்டுமானால் கருணாநிதி காலத்து அரசியல்வாதியாக இருக்கலாம். ஆனால் நெட்டிசன் உடனுக்குடன் பித்தலாட்டங்களை தோலுரித்து காட்டுவதில் வல்லவர்கள். வாக்காளர்களும் அப்படித்தான். எப்போதும் ஏமாளிகளாக இருக்க மாட்டார்கள் என்பதை உணர்த்துகின்ற வகையில் திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News