Kathir News
Begin typing your search above and press return to search.

இலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு - பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி!

இலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு - பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி!

இலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு - பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Aug 2019 11:15 AM IST


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்ட லண்டன் கூட்டத்தில் இலங்கை தமிழர் ஒருவர் அவரை விரட்டியடித்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.


விம்பம் கலை, இலக்கிய, திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் 'தொல் திருமாளவனுடன் இரு நாள் நிகழ்வுகள்' என்ற நிகழ்ச்சி ஆரம்பமாகியது. இதில், தொல் திருமாவளவனின் அமைப்பாய் திரள்வோம் நூல் வெளியீட்டு நிகழ்வும், கலந்துரையாடலும் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


அப்போது கூட்டத்தில் சுமார் 100 தமிழர்கள் இலங்கை தமிழர்கள் உட்பட அனைவரும் பங்கேற்றனர், கூட்டத்தில் பேச தொடங்கிய திருமாவளவன் இந்தியாவில் மதவாத சக்திகள் அதிகரித்து விட்டார்கள் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை அவர்களால் அனுபவித்து வருகிறோம், இதற்கு முடிவு கட்டி தமிழர்களின் கலாச்சாரத்தை பண்பாட்டை காக்க விடுதலை சிறுத்தை கட்சிக்கு நிதி உதவி அளியுங்கள் என்று கேட்டு கொண்டிருந்தார்.


அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த இலங்கையை சேர்ந்த ஆறுமுகம் என்ற ஈழ தமிழர், உன்னை போன்ற ஆட்களால் தான் தமிழ் இனமே அழிந்தது, எங்கள் மக்கள் அழிவிற்கு காரணமான திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்த துரோகி நீ நிச்சயம் உன்னை போன்ற ஆட்கள் இருப்பதால் தான் இலங்கையில் நாங்கள் அழிந்தோம். இனி இந்தியாவில் உள்ள தமிழர்களையாவது விட்டு வை, பணம் தானே உனக்கு வேணும் பொருக்கி கொள் என்று பணத்தை விட்டு எறிந்தார். மேலும் தமிழர்களை இனி ஏமாற்றி உங்களால் மதமாற்றம் செய்யமுடியாது ஒழுங்காக ஓடி விடு என்று திட்டி தீர்த்துவிட்டார்.




https://youtu.be/YEW1u7KHp8k

Next Story
கதிர் தொகுப்பு
Trending News