திருப்பரங்குன்றம் மலையில் ஆக்கிரமித்து கொடிமரம் வைத்த தர்கா- இந்து முன்னணி முயற்சியால் நீக்கம் !
இந்து முன்னணியின் சீரிய முயற்சியால் அதுபோன்ற நடவடிக்கைகள் தடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
By : Shiva
மதுரையில் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை உச்சியில் அவுலியா தர்காவினரால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கொடி மரத்தை உடனடியாக அகற்ற ஆட்சியர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் ஏற்றப்பட்ட கொடியை அகற்ற வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்ததை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையிலான கூட்டம் கடந்த மாதம் 24ஆம் தேதியன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை கூட்ட முடிவுகளின் அடிப்படையில் மரத்தால் அமைக்கப்பட்ட கொடிமரத்தை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்றும் புதிதாக அமைக்கப்பட்ட இரும்பினாலான கொடிமரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பதை இரு தரப்பினரும் உரிய சிவில் நீதிமன்றத்தினை அணுகி பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. எனவே முன்பு பயன்படுத்தி வந்த மரத்தாலான கொடிமரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் தர்காவினரால் அமைக்கப்பட்ட இரும்பாலான கொடிமரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்து முன்னணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெற்றி செய்தியாக தெரிவித்துள்ளது.
இந்துக் கோவில்களை ஆக்கிரமித்து அவற்றின் சொத்துக்களையும் தங்கள் வசப்படுத்திக் கொள்ள பலர் முயற்சி செய்து வரும் நிலையில் இந்து முன்னணியின் சீரிய முயற்சியால் அதுபோன்ற நடவடிக்கைகள் தடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
SOURCE : Twitter
Image : Twitter