Kathir News
Begin typing your search above and press return to search.

சகல தோஷங்களையும் நீக்கும் திருவக்கரை காளியம்மன் ஆலயம்!

முன் ஜென்ம வினைகளினால் ஏற்படக்கூடிய உடல் நோய்கள், தோஷங்கள், பரிகாரங்களுக்கு உட்படாத கிரக தோஷங்கள், காரணம் கண்டறிய முடியாத காரியத்தடைகள் அனைத்தும் விலகிட வழிபட வேண்டிய தெய்வம் திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில்.

சகல தோஷங்களையும் நீக்கும் திருவக்கரை காளியம்மன் ஆலயம்!

KarthigaBy : Karthiga

  |  29 Feb 2024 2:38 AM GMT

வராக நதி சங்கராபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது. இத்தளத்தில் சந்திரமவுலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் ஈசன் அருள் பாலிக்கிறார். வடிவாம்பிகை என்ற திருநாமம் கொண்டு அம்பாள் அருள்கிறாள். திருவக்கரையில் பூமியில் புதைந்த மரங்கள் அதே வடிவில் கல் மரங்களாக உள்ளன. வக்ரா சூரன் எனும் அசுரன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து பல வரங்களை பெற்றான். அந்த வரங்களின் விளைவாக பலருக்கும் துன்பம் விளைவித்தான்.


அவனது கொடுமைகளை தாங்க முடியாமல் பலரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அதற்கு சிவபெருமானும் மகாவிஷ்ணுவை அடைத்து வக்ராசுரனை வதம் செய்யச் சொன்னார். அதன்படி வக்ராசுரன் இருந்த இடத்தை அடைந்த மகாவிஷ்ணு பெரும் போருக்கு பின் சக்கராயுதத்தை பயன்படுத்தி அவனை வதம் செய்தார். வக்ராசூரனுக்கு துன்முகி என்ற ஒரு சகோதரி இருந்தாள். தன் அண்ணனின் அதிகாரம் தந்த ஆணவத்தால் அவளும் பற்பல கொடுஞ்செயல்களை செய்தாள். இதைகேட்ட சிவபெருமான் துன்முகி வதம் செய்யும் பொறுப்பை பார்வதி தேவியிடம் கொடுத்தார். திருக்கையில் இருந்து புறப்பட்ட பார்வதி தேவி துன்முகியை சந்தித்தபோது அவள் கருவுற்றிருந்தாள்.


தாய் செய்த தவறுக்கு பிள்ளையை கொள்வது நியாயம் இல்லை என்பதால் துன்முகியின் வயிற்றைக் கிழித்து வதம் செய்த பார்வதி,வயிற்றில் இருந்த சிசுவை எடுத்து குண்டலமாக மாற்றி தன் காதில் அணிந்து கொண்டார். வக்ராசுரன் வாழ்ந்த இடம் என்பதால் வக்கரை என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் காலியாக நின்று காட்சி கொடுப்பதால் வக்ரகாளி என்று பெயர் பெற்றார் .இந்த அன்னை தன்னுடைய சிரசில் தீச்சுடரும் கபாலமும் கொண்ட கிரீடத்தை அணிந்துள்ளார். வலது காதில் சிசுவை குண்டலமாக தரித்துள்ளாள்.


அஷ்ட கரங்களுடன் காணப்படும் இந்த அன்னை வலது பக்க கரங்களில் பாசம், சக்கரம் ,வால் ,கட்டாரி தாங்கியும் ,இடது கரங்களில் மூன்றில் உடுக்கை, கேடயம் கபாலம் தாங்கியும் மற்றொரு கரத்தை இடது கால் பக்கமாக ஆள்காட்டி விரலை மட்டும் பூமியை நோக்கி நீட்டி காட்டுவது போல் வைத்துள்ளார். இந்த ஆலயத்தில் சப்த மாதர்களும் எழுந்தருளியுள்ளனர். அவர்களின் சாமுண்டிக்கு பதிலாக அன்னை ஆதிபராசக்தியே காலியாக எழுந்தருளியுள்ளார். நவகிரகங்களில் ராகு கேது இரண்டிற்கும் அதிதேவதை வக்ரகாளி ஆவாள். ஜாதகத்தில் வகரத்தில் உள்ள கிரகங்களின் கெடு பலனை குறைக்க மூன்று பௌர்ணமிகள் தொடர்ந்து இங்கு வழிபட்டால் மாற்றம் நிச்சயம் என்கிறார்கள். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 5.30 வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரியில் இருந்து வருபவர்கள் பெரும்பாக்கம் என்ற ஊரை வந்தடைந்தால் அங்கிருந்து 7 கி.மீ தொலைவில் திருவக்கரை உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News