திருவள்ளுவர் கோயில் கும்பாபிஷேகம்! திருவள்ளுவர் இந்துவா என்று கேட்டவர்களுக்கு நெத்தியடி!
திருவள்ளுவர் கோயில் கும்பாபிஷேகம்! திருவள்ளுவர் இந்துவா என்று கேட்டவர்களுக்கு நெத்தியடி!
By : Kathir Webdesk
திருக்குறள் தந்த திருவள்ளுவ நாயனாருக்கு சென்னை மயிலாப்பூரில் கோவில் உள்ளது. இந்த கோவில் கிபி 16-ஆம் நூற்றாண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் மூலவராக திருவள்ளுவ நாயனார் உள்ளார். மேலும் திருவள்ளுவரின் மனைவி வாசுகி, ஏகாம்பரேஸ்வரர், துர்க்கை, முருகன், தட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.
திருவள்ளுவ நாயனார் கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோவில் 1985-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பிறகு 2001-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
சமீபத்தில், இந்து மதத்தை சேர்ந்த திருவள்ளுவ நாயனாரை, அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று கடவுள் நம்பிக்கையே இல்லாத கும்பல்கள் செய்திகளை பரப்பினர். திக, திமுக, கம்யூனிஸ்டுகள், திருமாவளவன் போன்ற இந்து மத விரோதிகள் எல்லாம் ஓரணியில் திரண்டு திருவள்ளுவர் இந்து அல்ல என்று முடிந்தவரை தமிழர்களை திசை திருப்பும் வேலையில் இறங்கினர். ஆனால் அது எடுபடவில்லை. மக்கள் உண்மையை புரிந்துகொண்டனர்.
இந்த நிலையில்தான் திருவள்ளுவர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலையத்துறை முடிவு செய்து, அதற்கான பணிகளை துரிதப்படுத்தி உள்ளது. இதற்கான பணிகளை அறநிலையத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் செய்து வருகின்றனர்.
வருகின்ற ஜனவரி மாதம் திருவள்ளுவர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 18 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் திருவள்ளுவர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.