Kathir News
Begin typing your search above and press return to search.

திறந்தவெளியில் மருத்துவ கழிவுகள் - திருவாரூர் மருத்துவகல்லூரி அலட்சிய நிர்வாகத்தால் ஒரு கிராமமே அவதி

திருவாரூர் அரசு மருத்துவமனை திறந்தவெளி கழிவுகள் அகற்றம் செய்ததன் காரணமாக கிராம மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.

திறந்தவெளியில் மருத்துவ கழிவுகள் - திருவாரூர் மருத்துவகல்லூரி அலட்சிய நிர்வாகத்தால் ஒரு கிராமமே அவதி
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 May 2022 1:45 AM GMT

niceதிருவாரூர் மாவட்டம் அருகில் உள்ள கிராமம் விளமல் பகுதியில், அமைந்துள்ள மருத்துவமனைதான் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ கழிவுகள் தொடர்ச்சியான பணம் திறந்தவெளியில் அகற்றப்பட்ட வருவதன் காரணமாக பல்வேறு துயரங்களையும் கிராம மக்கள் அனுபவித்து வருகிறார்கள். மேலும் இது குறித்து விரிவான செய்தியை வெளியிட்டு உள்ள விகடன் சார்பில், கிராம மக்கள் இந்த மருத்துவக் கழிவுகள் அகற்றம் செய்ததன் காரணமாக பல்வேறு துயர நிலையை அடைந்து வருவதாகவும் வெளியிட்டுள்ளது.


மேலும் இது பற்றிய கிராம மக்கள் கருத்துகையில், நாங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறோம். மேலும் எங்களால் ஒரு வாய் சோறு கூட நிம்மதியாக சாப்பிட முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அந்த அளவிற்கு இந்த மருத்துவ கழிவுகளால் துர்நாற்றம் வீசக் கூடிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மருத்துவமனை அதினால் இதற்கு ஒரு சூழ்நிலை ஏற்படும் என்பது கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு அளவிற்கு தள்ளப்பட்டுள்ளோம்" என்று கூறுகிறார்கள்.


குறிப்பாக இந்த மருத்துவமனை 2010ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள் தலைமையில் திறக்கப்பட்ட பட்டுள்ளது. மேலும் ஏறக்குறைய 500 படுக்கை வசதிகளுடன் நாள் ஒன்றுக்கு 1500 நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் அளவிற்கு கட்டப்பட்டுள்ள மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள் அனைத்தும் ஏன்? தண்டலை கிராமப்பகுதியில் கொட்டப்படுவது அந்த மக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்து வருகிறது. எனவே கடந்த ஒரு வருடங்களாக மருத்துவமனைகள் பயன்படுத்திய ஊசிகள் முதல் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் மருத்துவ நிர்வாகம் இந்த கிராமத்தில்தான் அப்புறம் நடத்துவதாகவும் கிராம மக்கள் மிகுந்த வருத்தத்தை தெரிவித்து உள்ளார்கள். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார்.

Input & Image courtesy:Vikatan News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News