Kathir News
Begin typing your search above and press return to search.

'ஊழல் செய்தால் சிறை உறுதி இது எனது உத்தரவாதம்'- பிரதமர் மோடி!

ஊழல் செய்தால் சிறை உறுதி என்பது எனது உத்தரவாதம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஊழல் செய்தால் சிறை உறுதி இது எனது உத்தரவாதம்- பிரதமர் மோடி!

KarthigaBy : Karthiga

  |  12 April 2024 3:02 PM GMT

ராஜஸ்தான் மாநிலம் கரௌலி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பேசியதாவது:-

நாடு முழுவதும் ஊழல்வாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதே இந்தியா கூட்டணியை எதிர்க்கட்சிகள் உருவாக்க காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.ஊழலை வேரறுக்க வேண்டும் என கூறும் நான் ஒருபுறம் ஊழலை காக்க வேண்டும் என கூறுவோர் மறுபுறம். ஊழலை பாதுகாக்க புறப்பட்ட அனைவரும் நான் கூறுவதை கவனமாக கேட்க வேண்டும். எத்தனை அச்சுறுத்தல்களாலும் என்னை தடுக்க முடியாது .

ஊழல்வாதிகள் அனைவரும் சிறைக்கு சென்றாக வேண்டும் .இது மோடியின் உத்தரவாதம். ஊழல் ஒரு சார்பு அரசியலில் மூழ்கிய காங்கிரஸ் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளில் கூட கொள்ளையடிக்கும் வாய்ப்பை கண்டறிந்தது. தற்போதைய மக்களவைத் தேர்தல் யார் எம் பி ஆக வேண்டும் என்பதற்கான தேர்தல் அல்ல. இது வளர்ந்த பாரதத்தை உருவாக்கும் இலக்கை எட்டுவதற்கான தேர்தல். காங்கிரஸ் கட்சியின் இளவரசர் வெளிநாடுகளுக்கு சென்று இந்தியா ஒரு நாடே அல்ல என்று கூறுவதோடு இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரத்தையும் கேட்கிறார்.

கட்சிக்கு நாட்டின் நலன்களை விட சுயநலனே முதன்மையானது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த கட்சியான காங்கிரஸின் வரலாறு மட்டுமல்ல. அதன் நோக்கங்களும் அபாயகரமானவை. இத்தகைய தேச விரோத செயல்களை வெட்கமின்றி நியாயப்படுத்துகிறது. அக்கட்சி கச்சத்தீவில் யாரேனும் வாழ்கிறார்களா? என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். யாரும் வாழாத பகுதி என்றால் அதை தாரை வார்த்து கொடுக்கலாமா?

ராஜஸ்தான் போன்ற எல்லை மாநிலத்தின் வெற்றி பகுதியை அண்டை நாட்டுக்கு தாரை வார்த்துக் கொடுக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எனது வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் நாட்டுக்கு அர்பணித்துள்ளேன் .ஓய்வெடுக்கவோ அல்லது வேடிக்கையாக பொழுதை கழிக்கவோ பிறந்தவர் அல்ல மோடி. நாட்டு மக்களுக்காக பெரும் இலக்கை எட்ட கடுமையாக உழைப்பவரே மோடி. காங்கிரஸ் அரசின் அலட்சியத்தால் பல தலைமுறையினர் பாதிக்கப்பட்டனர். இன்று ஒரு ஏழையின் மகன் பிரதம சேவகனாக இருக்கிறான். ஏழை மக்கள் தங்களின் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வாழ்கின்றனர் என்றார் அவர்.


SOURCE :Dinaseithi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News