'இது எங்க ஏரியா' - இந்துக்களின் எச்சரிக்கை பலகை இணையத்தில் வைரல்
எச்சரிக்கை இது இந்துக்கள் வாழும் பகுதி மதப் பிரச்சாரத்திற்கு அனுமதி இல்லை என வைக்கப்பட்டுள்ள பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
By : Mohan Raj
எச்சரிக்கை இது இந்துக்கள் வாழும் பகுதி மதப் பிரச்சாரத்திற்கு அனுமதி இல்லை என வைக்கப்பட்டுள்ள பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே இந்துக்கள் வாழும் பகுதியில் மத பிரச்சாரங்கள் மத கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என வைக்கப்பட்டுள்ள பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் காடுவெட்டி பாளையம் என்ற கிராமம் உள்ளது, இந்த கிராமத்தின் நுழைவு வாயிலில் 'இது இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி இங்கு மத பிரச்சாரம் செய்யவும், மத கூட்டங்கள் நடத்தவும் அனுமதியில்லை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
காவி மற்றும் மஞ்சள் நிறத்தில் வைக்கப்பட்டுள்ள பெரிய வாசகங்களுடன் கூறிய அறிவிப்பு பலகை தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.