Kathir News
Begin typing your search above and press return to search.

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு காரணம் இதுதான்: ஆயுர்வேதம் சொல்லும் ரகசியம்.!

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு காரணம் இதுதான்: ஆயுர்வேதம் சொல்லும் ரகசியம்.!

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு காரணம் இதுதான்: ஆயுர்வேதம் சொல்லும் ரகசியம்.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Feb 2021 11:32 PM IST

ரசத்தை சாதாரணமாக செய்து விடலாம் என்றாலும் அதிலுள்ள ஒவ்வொரு பொருட்களுமே மிகச்சிறந்த மருத்துவ குணங்களை கொண்டவை. சுவை மற்றும் நறுமணம் நிறைந்த இந்த பொருட்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். வெளிநாடுகளில் சூப் உணவுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படும். அது போல நம் நாட்டில் ரசம். காய்ச்சல், இருமல், தும்மல், உடல் சோர்வு, உடல் களைப்பு, செரிமானப் பிரச்சனை, சத்துகுறைபாடு, தொண்டை கமறல், வயிற்று புண் போன்றவை குணப்படுத்த ரசம் ஒரு நல்ல கை வைத்தியமாக பயன்படுத்தப் படுகிறது. இதனை எளிதாகவும் செய்து விடலாம். இந்தக் காரணங்களுக்காகத்தான் நம் முன்னோர்கள் ரசத்தை தன்னுடைய அளவில் அடிக்கடி பயன்படுத்தி வந்தார்கள்.

புளி ரசம், தக்காளி ரசம், எலுமிச்சை ரசம், பிரண்டை ரசம், தூதுவளை ரசம், மிளகு ரசம், கொள்ளு ரசம், பாசிப்பயறு ரசம், பருப்பு ரசம், அன்னாசிப்பழ ரசம் என்று பல வகையான ரசம் உள்ளது. இந்த ரசம் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது புளி, மிளகு, சீரகம், மஞ்சள் தூள், பூண்டு, வர மிளகாய், தக்காளி, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவை ஆகும். சைவம் மற்றும் அசைவ உணவுகள் என்று எதை சாப்பிட்டாலும் அது செரிமானம் ஆக ரசம் உதவும். தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக குழந்தைகள் உணவில் ரசம் சேர்க்கப்படும். ஏனெனில் இது தாய்ப்பாலுக்கு இணையான சத்தை வழங்கக்கூடியது. அதே போல கர்ப்பிணி பெண்கள் உணவிற்கு பிறகு ஒரு கிளாஸ் ரசம் குடித்தால் ஈசியாக ஜீரணம் ஆகும்.

ரசத்தின் சுவைக்கு புளி முக்கிய காரணம். புளியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. குடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற இது உதவுகிறது. புளி ஒரு சிறந்த மலமிளக்கி. இதனால் மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும். காய்ச்சல் வந்தாலே ரசம் சாதம் தான் கொடுப்பார்கள். கையில் மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற ஒரு பழமொழி உண்டு. ஏனெனில் நச்சுகளை முறிக்கும் தன்மை மிளகுக்கு இருக்கிறது. உடலில் உள்ள நச்சுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றி விடும். மேலும் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை இதற்கு உள்ளது. மிளகு வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால் உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News