Kathir News
Begin typing your search above and press return to search.

இயற்பியலுக்கான நோபல் பரிசை தட்டிச் சென்ற மூன்று விஞ்ஞானிகள்!

அமெரிக்கா ஜெர்மனி மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்பியலுக்கான நோபல் பரிசை தட்டிச் சென்ற மூன்று விஞ்ஞானிகள்!
X

KarthigaBy : Karthiga

  |  4 Oct 2023 11:30 PM IST

ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த ஆய்வாளர் ஆல்ஃபிரட் நோபல் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது . உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் , பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு இந்த பரிசளிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் பணி தொடங்கியது . முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது .


கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கட்டாலின் கரிக்கோ, ட்ரு வைஸ்மேன் ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கூட்டாக அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக் ஹோமில் உள்ள ராயல் சுவீடிஷ் அறிவியல் அகாடமி இன் பொதுச் செயலாளர் ஹான்ஸ் எலெக்ரன் இதனை அறிவித்தார்.


அதன்படி அமெரிக்காவை சேர்ந்த பியரி அகோஸ்தினி , ஜெர்மனியைச் சேர்ந்த பெரங்க் கிரௌஸ் மற்றும் ஸ்வீடன் நாட்டின் ஆனி ஹூலியர் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த விருது பகிர்ந்து அளிக்கப்படுகிறது. அணுக்களில் உள்ள எலக்ட்ரானிக் இயக்கவியல் ஆய்வுக்காக இவர்கள் 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News