Kathir News
Begin typing your search above and press return to search.

ஒலியை விட மூன்று மடங்கு வேகம் - பிரமோஸ் ஏவுகணை வெற்றி!

இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

ஒலியை விட மூன்று மடங்கு வேகம் - பிரமோஸ் ஏவுகணை வெற்றி!

KarthigaBy : Karthiga

  |  31 March 2024 12:51 AM GMT

ஒலியை விட மூன்று மடங்கு வேகம் உள்ள இந்திய ராணுவத்தின் 'ரைசிங் சன்' பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை நேற்று செய்யப்பட்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய ராணுவ வரிசையில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. ஆசியாவைப் பொறுத்த அளவில் இந்திய ராணுவம் இரண்டாவது பெரிய இராணுவமாக இருக்கிறது. எனவே ஒவ்வொரு நாளும் புதிதாக ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றன. அந்த வரிசையில் இன்று 'ரைசிங்சன்' ப்ரமோஸ் ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது.

இது நீண்டதூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் ஏவுகணை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பிரமோஸ் வகை ஏவுகணைகள் இந்திய ராணுவத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து இந்த ஏவுகணையை வடிவமைத்தனர். ஆனால் தற்போது இந்தியா தனித்தன்மையுடன் இதனை உற்பத்தி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மணிக்கு 3000 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சூப்பர் சோனிக் பிரமோஸ் ஏவுகனைகளுக்கு சர்வதேச நாடுகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது .

ரஷ்யா உரைனுக்கு எதிரான போரில் இதனை பயன்படுத்தி இருக்கிறது. இந்த ஏவுகணைகளை உக்கரைனால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவே பிலிப்பைன்ஸ் ,வியட்நாம் ,மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பிரமோஸ் ஏவுகணைகளை கேட்டு இந்தியாவிற்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. மறுபுறம் 'ரைசிங் சன்' ஏவுகணையை இந்தியா - அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்திருக்கிறது. இந்தோ பசிபிக் பகுதியில் அமைதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இது நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் இது பயணிக்கும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் துல்லியமாக எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் இது பயணிக்கும் எவ்வளவு தூர இலக்கை தாக்கும் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.


SOURCE :Dinasudar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News