Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை இந்த மாதம் எவ்வளவு கோடி தெரியுமா?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கையாக ரூபாய் 4.70 கோடி கிடைத்துள்ளது. 3 கிலோ தங்கமும் கிடைத்துள்ளது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை இந்த மாதம் எவ்வளவு கோடி தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  7 May 2023 8:45 AM GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எனப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் உள்ள காவடிப் பிறை மண்டபத்தில் கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமை தாங்கினார். இணை ஆணையர் கார்த்திக் முன்னிலை வகித்தார். சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவார பணி குழுவினர் தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணி குழுவினர் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர் .

இதில் நிரந்தர உண்டியலில் ரூபாய் 4 கோடியே 65 லட்சத்து 72 ஆயிரத்து 815-ம், கோசோலை பராமரிப்பு உண்டியலில் ரூபாய் 46 ஆயிரத்து 475-ம் யானை பராமரிப்பு உண்டியலில் ஒரு லட்சத்து 9,543 -ம், சிவன் கோவில் உண்டியலில் 2,28,373 - ம் , வெயிலுகண்ட அம்மன் கோவில் உண்டியலில் 529-ம் என பக்தர்கள் மொத்தமாக ரூபாய் 4 கொடியை 70 லட்சத்து 9,55 செலுத்தி இருந்தனர். 2 கிலோ 910 கிராம் தங்கம் 42 கிலோ 750 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் வெளிநாட்டு பணம் 977 -ம் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News