கிரக தோஷங்கள் போக்கும் திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் பிரசித்தி பெற்ற சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் 17 வது திவ்ய தேசமாக இத்தலம் உள்ளது.
By : Karthiga
முன்பொரு காலத்தில் முனையதரையர் என்பவர் சோழமன்னனின் அபிமானம் பெற்று மன்னனுக்கு கப்பம் வாங்கி கொடுக்கும் பணியில் இருந்தார். அவர் சவுரிராஜ பெருமாள் இடம் ஆனந்த பக்தியுடையவர் . திருகண்ணபுரத்தில் வாழ்ந்து பெருமாளுக்கு சேவைகள் செய்து வந்தார் . அவர் மீது ஒரு பெண் பேரன்பு கொண்டு வாழ்ந்து வந்தாள். ஒரு வருடம் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. இதனால் முனையதரையர் தான் சேகரித்த கப்பல் முழுவதையும் கோவிலில் திருவாராதனத்துக்கும் அடியாருக்கும் வண்ணம் வழங்குவதிலும் செலவிட்டார். இதனால் சினம் கொண்ட சோழ மன்னன் முனைய தரையரை சிறையில் அடைத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முனையதரையர் மீது பேரன்பு கொண்ட பெண் சவுரிராஜ பெருமாளை மனம் உருகி வேண்டியனாள். அப்போது அவள் ஐந்து நாட்களுக்குள் சிறையில் இருந்து முனையதரையர் விடுவிக்கப்படாவிட்டால் நெருப்பில் பாய்ந்து உயிர் துறப்பதாக சபதம் செய்தாள் .இதனால் மன்னர் கனவில் தோன்றிய சவுரிராஜ பெருமாள் முனையதரையரை சிறையில் இருந்து விடுதலை செய்ய உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட முனையதரையர் திருக்கண்ணபுரத்துக்கு சென்று தீயில் பாய்ந்து உயிர்விட தயாராக இருந்த பெண்ணை காப்பாற்றினார் .
சவுரிராஜன் தலையில் சவுரி அணிந்திருப்பார். ஒரு நாள் பெருமாளை தரிசனம் செய்ய வந்த சோழ மன்னனுக்கு பிரசாதமாக கொடுக்க பூமாலை இல்லாமல் தவித்த அர்ச்சகர் தான் சற்று முன்பு தேவதாசிக்கு அனுப்பி இருந்த புஷ்பத்தை கொண்டுவரச் செய்து அதை மன்னனுக்கு அளித்தார். அந்த புஷ்பத்தில் கருப்பான முடி இருந்ததை கண்ட மன்னன் அர்ச்சகரை கடிந்தார்.அப்போது அர்ச்சகர் பெருமாளுக்கு எப்போதும் தலையில் கருமையான முடி இருக்கும் எனக் கூறினார் .இதனால் கோபம் கொண்ட மன்னன் மறுநாள் காலை வரும்போது பெருமாளுக்கு முடி இருப்பதை காட்ட வேண்டும் என கூறிச் சென்றார்.
இதனால் அர்ச்சகரை சோழ மன்னனின் தண்டனையில் இருந்து விடுவிக்க பெருமாள் கருமையான முடிவுடன் காட்சியளித்தார். திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலுக்கு எதிரில் உள்ள நித்திய புஷ்கரணியின் பிரதான படிக்கட்டின் மேல் புறம் தீர்த்தக்கரையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. ஆஞ்சநேயருக்கு தனி கோவில் அமைந்திருப்பதால் இவரின் சக்தி அளவிட முடியாது. தெற்கு நோக்கி அஞ்சலி ஹஸ்தராக நின்ற திருக்கோளத்தில் சேவை சாதிக்கும் அவரை வரப் பிரசாதி என்று பக்தர்கள் வணங்கி வருகின்றனர். திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் நவகிரகங்கள் மேல் பெருமாளின் பார்வைபடுவதால் இந்த கோவிலில் வழிபாடு செய்வோரின் சகல கிரக தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.