திருப்பதி: 4 மாதங்களில் ரூ.500 கோடிக்கு மேல் உண்டியல் வசூல்!
திருமலை கோயிலில் கடந்த 4 மாதங்களில் ரூ.500 கோடிக்கு மேல் உண்டியல் வசூலானது.
By : Bharathi Latha
ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. எப்பொழுதுமே கூட்டம் அதிகமாக காணப்படும் முக்கியமான தளங்களில் ஒன்றாக, திருப்பதி ஏழுமலையான் கோவில் இடம் பெறுகின்றது. எனவே உண்டியல் வசூல் இந்த கோவிலில் மிகவும் அதிகமாக மற்ற கோயில்களைக் காட்டிலும் இருக்கிறது. தொடர்ந்து நான்காவது மாதமாக இங்குள்ள வெங்கடேஸ்வரா மலைக்கோவிலில் 'ஹண்டி' மூலம் கிடைத்த வருமானம் ₹120 கோடியைத் தாண்டியது.
ஜூன் மாதத்தில் உண்டியல் ₹123.76 கோடி வருமானம் ஈட்டியது. கடந்த நான்கு மாதங்களில் ஒட்டுமொத்தமாக ₹500 கோடிக்கு சற்று அதிகமாக இருந்தது. புள்ளி விவரங்களின்படி, மார்ச் மாதத்தில் 'ஹுண்டி' வருமானம் ₹128 கோடியும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் ₹127.50 கோடியும், மே மாதத்தில் ₹130.50 கோடியும் கிடைத்துள்ளது.
இதே நிலை தொடரும் பட்சத்தில், நடப்பு நிதியாண்டில் ஆண்டுக்கு 'உண்டியல்' வருமானம் ₹1,500 கோடியை தாண்டும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இதுவே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மக்களுக்கு அதிகமாக நம்பிக்கை இருக்கும்போது காரணத்தினால் நிறைய பெண்களும் வேண்டுதல்களை நிறைவேற்றி பிறகு கடவுள் காணிக்கைகளை மக்கள் அதிகமாக செலுத்தி வருகிறார்கள்.
Input & Image courtesy: The Hindu