Begin typing your search above and press return to search.
ஒரே நாளில் சாதனை படைத்த திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை - திருமலையில் குவியும் பக்தர்கள் கூட்டம்
திருப்பதி கோவில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை 4 கோடி 67 லட்ச ரூபாய் பக்தர்களால் ஏழுமலையானுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

By : Mohan Raj
திருப்பதி கோவில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை 4 கோடி 67 லட்ச ரூபாய் பக்தர்களால் ஏழுமலையானுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்தலுக்கு பின் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்பொழுது கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
மேலும் அவர்கள் அதிக அளவில் உண்டியல் காணிக்கையின் செலுத்தி வருகின்றனர் கடந்த 24ம் தேதி மட்டும் 67,467 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அன்று ஒரு நாள் உண்டியல் காணிக்கை மட்டும் 4 கோடியே 67 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது, மேலும் 35 ஆயிரத்து 56 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Next Story
