Kathir News
Begin typing your search above and press return to search.

கிரக தோஷங்களை நீக்கும் திருவாலீஸ்வரர் திருக்கோவில் !

ராமாயணத்தில் பராக்கிரமசாலியாக வர்ணிக்கப்படும் வாலி வழிபாடு செய்த லிங்கத்திற்கு திருவாலீஸ்வரர் என்று பெயர் வந்தது

கிரக தோஷங்களை நீக்கும் திருவாலீஸ்வரர் திருக்கோவில் !

KarthigaBy : Karthiga

  |  11 April 2023 4:00 AM GMT

ராமாயணத்தில் பராக்கிரமசாலியாக வர்ணிக்கப்படும் வாலி வானர்களின் தலைவனாக விளங்கியவன். கிஸ்கிந்தபுரி என்ற இடத்தை ஆட்சி செய்து வந்த வானரப் பேரரசன் . இவன் சிறந்த சிவ பக்தனும் ஆவான். தினமும் வேலை தவறாது சிவபெருமானை வழிபாடு செய்வான். ஒரு நாள் வாலி காட்டுப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தான். அவன் சென்ற வழியில் ஒரு அசரீரி ஒலித்தது.


வானர அரசனே நீ செல்லும் வழியில் பசுமை நிறைந்த அசனலபுரம் என்ற இடத்தில் 16 வகையான செல்வங்களை பெறும் வகையில் 16 பட்டைகள் கொண்ட சிவலிங்கம் அமைத்து வழிபடு. அப்படி செய்தால் நீ நினைத்த காரியம் வெற்றி பெறுவதுடன் அனைவரும் நலமுடன் இருப்பார்கள் என்றது அந்த குரல் .10 படைகளுடன் சென்று கொண்டிருந்த வாலி குறிப்பிட்டு இடத்திற்கு வந்ததும் அங்கு ஒரு வித அமைதி நிலவுவதைக் கண்டு அதிசயத்தான்.


அசரீரி சொன்னது போலவே 16 பட்டை கொண்ட சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். தன் படை வீரர்களின் உதவியோடு அங்கே ஒரு குலத்தை வெட்டி அதிலிருந்து கிடைத்த நீரை கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். பின் மலர்கள் சர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கினான். வாலி வழிபாடு செய்த லிங்கத்திற்கு திருவாலீஸ்வரர் என்று பெயர் வந்தது. புராண காலத்தில் அசலனபுரம் என்று அழைக்கப்பட்ட ஊர் இப்போது அரசூர் என்று அழைக்கப்படுகிறது .


வாலி வழிபட்ட வாலீஸ்வரர் பிற்காலத்தில் மண் முடிப் போனது. ஆனால் பிற்காலத்தில் வந்த பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மர் என்கிற ராஜசிம்மன் சோழ மன்னன் ராஜராஜ சோழன் ஆகியோர் இந்த ஆலயத்தை திருப்பணி மூலம் முடித்துக் கொடுத்துள்ளனர் என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன. அமெரிக்க நாட்டின் தத்துவத்துறை திறனாய்வாளர் ஜான்ஸ்டீபன் என்பவர் சிவலிங்கம் என்ற தலைப்பில் ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் மகரிஷிகள் தவசீலர்கள் மற்றும் ஞானிகள் வழிபட்டாலும் மந்திர உச்சாடனங்கள் மூலமாகவும் ஏற்படுகின்ற அதிர்வலைகளை தன்னகத்தை ஈர்த்து வைத்துக் கொள்ளக்கூடிய பேராற்றல் சிவலிங்கத்திற்கு உள்ளது. அதை இந்த திருத்தலக்கு வந்து இறைவனை தரிசித்த உடன் நமக்குள் ஏற்படும் பக்தி பரவசத்தின் மூலம் உணர முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை மன்னன் ராவணேஸ்வரனை தனது வாலினாள் கட்டி போடும் அளவிற்கு வலிமை வாய்ந்த வாலி வழிபட்ட சிவபெருமான் என்பதால் இவரை வழிபாடு செய்தால் நமக்கும் மன உறுதியும் தேக பலமும் சாதனை படைக்கும் சக்தியும் ஒருங்கே கிடைக்கப்பெறும் என்கிறார்கள். இத்தல அம்பாள் சவுந்தரவல்லி , அழகுடை நாயகி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இத்தல சுவாமியையும் அம்பாளையும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கிரக தோஷங்கள் விலகும் கிரகங்களால் வாழ்வில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News