Kathir News
Begin typing your search above and press return to search.

ஜோதிகா போன ஆட்சியில் புரட்சியெல்லாம் பேசிட்டு இப்போ எங்கம்மா போய்ட்ட? - தேடும் இணையம்!

ஜோதிகா எங்கம்மா இருக்க என இணையவாசிகள் நடிகையும், சூர்யாவின் மனைவியும், திரையுலக போராளியான ஜோதிகாவை தேட ஆரம்பித்து விட்டனர்.

ஜோதிகா போன ஆட்சியில் புரட்சியெல்லாம் பேசிட்டு இப்போ எங்கம்மா போய்ட்ட? - தேடும் இணையம்!

KarthigaBy : Karthiga

  |  29 May 2023 3:00 PM GMT

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்துள்ள அத்திமரத்து கொல்லை கிராமத்தில் ஒன்றரை வயது குழந்தை தனுஷ்கா நல்ல பாம்பு ஒன்று கடித்துள்ளது. சாலை வசதி இல்லாததன் காரணமாக தாமதமாக மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர், பிரேத பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்து சென்றபோது, சாலை வசதி இல்லாததால் பாதி வழியில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து இறக்கி விட்டனர். பின்னர் கால்நடையாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பெற்றோர் அழுது கொண்ட குழந்தையின் சடலத்தை தூக்கி சென்றனர். இதுதொடர்பான செய்தி வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து பல்வேறு கட்சியின் இவர்களும் ஆளும் திமுக அரசின் மீது மீதான கோபத்தையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றன .இந்த சம்பவம் குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது கோபத்தை வெளியிப்படுத்தியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், 'வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அல்லேரி மலை கிராமப் பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை, பாம்பு கடித்து, சரியான சாலை வசதி இல்லாததால், சரியான நேரத்திற்கு மருத்துவமனை செல்ல முடியாததால் மரணமடைந்துவிட்ட செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் மலைக் கிராமங்களில் சாலைகள் அமைக்க மத்திய அரசு பெருமளவில் நிதி ஒதுக்கியிருக்கையில், இத்தனை ஆண்டுகளாக வேலூர் போன்ற மாநகரத்தைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் கூட சாலைகள் அமைக்கப்படவில்லை என்றால், இத்தனை ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது?

சரியான சாலை வசதி இல்லாததால், குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனை செல்ல முடியாததால் ஒரு குழந்தை இறப்பு என்பதைச் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தையின் சடலத்தைக் கையில் தூக்கிக் கொண்டு பத்து கிலோமீட்டர் தொலைவிற்குக் குழந்தையின் பெற்றோர் நடக்க நேர்ந்தது அதை விடக் கொடுமையானது. யாருக்குமே வரக்கூடாத துயரத்தின் உச்சம் இது. இந்தச் சிறு பெண் குழந்தையின் இறப்புக்கு, தமிழக அரசே முழு பொறுப்பு' என கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பாம்பு கடித்த குழந்தையை சரியான சாலை வசதி இல்லாத காரணத்தால் தக்க சமயத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இயலாமல் செல்லும் வழியிலேயே குழந்தை உயிர் இழந்த நிலையில், பிரேத பரிசோதனை செய்து திரும்பும் வழியில் சாலை வசதி இல்லை என்று கூறி ஆம்புலன்ஸ் இல் இருந்து இறக்கி விடப்பட்டு, 10 km தூரம் குழந்தையின் பெற்றோர் அழுதபடி குழந்தையை சுமந்து சென்ற அவலம், நம் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பது நெஞ்சை பதறச் செய்கிறது. "திராவிட மாடல் ஆட்சி" என பெருமை பேசும் அரசின் அலட்சியம் கண்டிக்கதக்கது' என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படி வேலூர் மாவட்டத்தில் முறையான சாலை வசதி இல்லாத காரணத்தினால் சிறுமி இறந்த விவகாரத்தில் கடந்த ஆட்சியில் கொதித்த நடிகர், நடிகைகள் எங்கே என சமூக வலைத்தளத்தில் மக்கள் தேடி வருகின்றனர். குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 2020 ம் ஆண்டு ஒரு விருது விழாவின் போது, 'கோவில்களுக்கு நன்கொடை அளிப்பது விட மருத்துவமனைகளுக்கு நன்கொடை அளிப்பதுதான் நல்லது' என நடிகை ஜோதிகா பேசியதும் குறிப்பிடத்தக்கது. இப்படி கடந்த ஆட்சிக்காலத்தில் கருத்து பேசி வலம் வந்த ஜோதிகா இந்த ஆட்சிக்காலத்தில் சாலை வசதி இல்லாத காரணத்தினால் ஒரு உயிர் போனதை பற்றி பேசாமல் இருப்பது பற்றி சமூக வலைத்தளத்தில் இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News