Kathir News
Begin typing your search above and press return to search.

ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் இல்லை - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆவேசம்!

ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார்.

ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் இல்லை - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆவேசம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 Nov 2022 7:02 AM GMT

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கவர்னராக இருப்பவர் தான் முகமது கான் என்பவர். இவருக்கும் அந்த மாநில அரசிற்கும் ஏற்கனவே மோதல் போக்கும் மற்றும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. பல்கலைக்கழகங்களில் துணை வாய்ந்தர்கள் நியமனம் உட்பட பல்வேறு விஷயங்களில் மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சனை நிலவுகிறது. இத்தகைய சூழ்நிலையில் அங்கு லோக் ஆயுக்தா விழா நடைபெற்றது. இதில் விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்ட சிறப்புரையாற்றினார்.


திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள சட்டசபை வளாகத்தில் நேற்று லோக் ஆயுக்தா விழா நடைபெற்றது இதில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் கூறுகையில், லோக் ஆயுக்தா சட்டம் சமுதாயத்திற்கு மிகவும் தேவையானது என்று குறிப்பிட்டார். சட்டத்தை யாரும் பலவீனப்படுத்த முடியாது. செயல்களில் ஈடுபடுவோரை கண்டும் காணாத வகையில் செயல்படவும் முடியாது.


மேலும் இந்த சட்டத்தை மாநிலத்தில் யாராவது தடுக்க முயற்சி செய்தால் கட்டாயம் மாநிலத்தின் ஆளுநர் நடவடிக்கை எடுக்க அவருக்கு உரிமை இருக்கிறது. கவர்னர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் பதவி கிடையாது. சில மசோதாக்களில் அவர் கையெழுத்து கிடவில்லை என்றால் அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இதனை சுப்ரீம் கோர்ட்டும் தெளிவுபடுத்த இருப்பதாக தமிழக கவர்னர் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Maalaimalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News