Kathir News
Begin typing your search above and press return to search.

தலித் கிறிஸ்தவரை கவுரவக் கொலை செய்த உயர் சாதி கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்! 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!!

தலித் கிறிஸ்தவரை கவுரவக் கொலை செய்த உயர் சாதி கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்! 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!!

தலித் கிறிஸ்தவரை கவுரவக் கொலை செய்த உயர் சாதி கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்! 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Aug 2019 11:12 AM IST



கேரளாவில் தலித் கிறிஸ்தவ இளைஞர் கவுரவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே மதத்தை சேர்ந்த உயர்சாதியினர் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை கோட்டயம் நீதிமன்றம் விதித்து பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.


கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் கெவின் ஜோசப். இவர் தலித் கிறிஸ்தவர் ஆவார். கோட்டயம் கல்லூரியில் படிக்கும் போது கெவின், நீனு என்பவரைக் காதலித்தார். காதலுக்கு எதிர்ப்பு இருந்ததால் பதிவு திருமணம் செய்ய முடிவு செய்தனர். கெவின் ஜோசப், தலித் என்பதாலும், நீனு ஜோசப் கிறிஸ்தவராக இருந்தபோதிலும், உயர்வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இவர் களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. ஆனால் எதிர்ப்பையும் மீறி கெவினும், நீனுவும் கடந்த ஆண்டு மே 25-ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.


இதைத் தொடர்ந்து ஒரு கும்பல், கோட்டயத்தில் உள்ள கெவின் வீட்டை சூறையாடி அவரையும், அவரது நண்பர் அனீஷையும் கடத்திச் சென்றது. அனீஷை கடுமையாகத் தாக்கிய அந்த கும்பல் வழியில் வீசிவிட்டுச் சென்றது.


இந்நிலையில், கடத்தப்பட்ட மறுநாள், கெவின் உடல் கொல்லம் அருகே ஒரு ஓடையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து கெவினின் உறவினர்கள் போலீஸில் புகார் செய்தனர்.


இந்த வழக்கில் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு கோட்டயம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவுற்ற நிலையில் கடந்த 22-ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட 14 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. நீனுவின் சகோதரர் சையானு சாக்கோ, நியாஸ் மோன், இஷான் இஸ்மாயில், ரியாஸ் இப்ராஹிம் குட்டி, மனு முரளிதரன், ஷிபின் சஜாத், நிஷாத், பாசில் ஷெரிப், சானு ஷாஜகான் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.


மேலும் நீனுவின் தந்தை சாக்கோ ஜான், ரமிஸ் ஷெரீப், ஷினு ஷாஜகான், விஷ்ணு ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.


இந்நிலையில், நேற்று 10 குற்றவாளிகளுக்கும் இரட்டை ஆயுள் தண்டனையை விதித்து நீதிபதி சி. ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். இரட்டை ஆயுள் தண்டனையை அவர்கள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு குற்றவாளிக்கும் தலா ரூ.40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. இதில் தலா ரூ. 1.5 லட்சம் நீனு மற்றும் கெவின் தந்தை ஜோசப் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கெவின் நண்பர் அனீஷுக்கு அபராதத் தொகையிலிருந்து ரூ.1 லட்சம் வழங் கப்படவேண்டும் என நீதிபதி ஜெயச் சந்திரன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.


தலித்துகளை தங்கள் அரசியல் சுயநலன்களுக்காக பயன்படுத்தி வரும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் சமூக ரீதியாக தலித்துளிடம் வன்மையை காட்டியுள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


- பிடிஐ


Next Story
கதிர் தொகுப்பு
Trending News