Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க அரசில் அலைக்கழிக்கப்படும் போக்குவரத்து தொழிலாளர்கள் - இன்று ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை

சுமூக உடன்பாடு எட்டப்படாததால் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இன்று தொடர்கிறது.

தி.மு.க அரசில் அலைக்கழிக்கப்படும் போக்குவரத்து தொழிலாளர்கள் - இன்று ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை
X

KarthigaBy : Karthiga

  |  24 Aug 2022 6:00 AM GMT

போக்குவரத்து கழக தொழிலாளர்களுடைய கோரிக்கைகளுக்கு சுமூக உடன்பாடு எட்டப்படாததால் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை இன்று தொடர்வதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கு கழக பணியாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டை,மாநகர் போக்குவரத்துக்கழக பயிற்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது. போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவ சங்கர் தலைமை தாங்கினார்.

போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் டாக்டர் கோபால் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் போக்குவரத்து கழக உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர.பேச்சுவார்த்தை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை தொடர்ந்து நடந்தது.பின்னர் போக்குவரத்து கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை இன்று 11 மணிக்கு மீண்டும் நடக்கும் அறிவித்தனர்.

தொடர்ந்து தொ.மு.ச தலைவர் சண்முகம் எம்.பி பொருளாளர் நடராஜன் ஆகியோர் கூட்டாக பேட்டி அளிக்கும் போது நாளை காலை 11 மணிக்கு மீண்டும் நடை பெறும் என சி.ஐ.டி சங்கர் தலைவர் அறிவித்தனர்.

சௌந்தரராஜன் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் எஸ்.எம்.எஸ் சங்கத் தலைவர் சுப்ரமணிய பிள்ளை ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-போக்குவரத்துக்கழக ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 7வது முறையாக நடைபெற்றது. சமூக உடன்பாடு எட்டப்படும் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட 66 சங்க நிர்வாகிகளும் எதிர்பார்த்தோம் ஆனால் எதிர்பார்த்தபடி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

குறிப்பாக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து நான்காண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை என்பதை மாற்றி அமைக்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களின் 81 மாதம் அகவிலைப்படி உயர்வை வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையையும் பிரதானமாக வைத்து நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தோம். ஆனால் இது தொடர்பாக எங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.

அதனால் எங்களுடைய கோரிக்கை தற்போது உடன்பாடு எட்டப்படவில்லை அதனால் தொடர்ந்து நாளை நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். அதிலும் அகவிலைப்படி உயர்வு கோரிக்கையை முதலமைச்சரிடம் கலந்துபேசி அறிவிப்பதாகவும் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்ம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


அண்ணா தொழிற்சங்க பேரவை பொதுச் செயலாளர் கமலக்கண்ணன் தலைவர் தாடி ராசு ஆகியோர் கூறும்போது 'விதிகளுக்குப் புறம்பாக பேச்சுவார்த்தை நடத்திய போது சங்கங்களை தனித்தனியாக தனி அறையில் அழைத்து பேசியது சரியானது அல்ல .அனைத்து சங்கங்களையும் ஒரே அறையில் அழைத்து பேசுவதுதான் மரபு. இதை இவர்கள் தற்போது மீறி உள்ளனர்' என்றனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News