'அறநிலையத்துறை அதிகாரிகள் ஒரு வருட ஊதியத்தை பிடிக்க வேண்டும்' - நீதிபதிகள் இப்படி கூற கரணம் என்ன?
கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வகை தடுக்காத அறநிலையத் துறை அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
By : Mohan Raj
கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வகை தடுக்காத அறநிலையத் துறை அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிடங்கள், சொகுசு பங்களாக்கள், நூற்பாலை போன்றவைகள் கட்டப்பட்டு உள்ளதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வெங்கட்ராமன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தனித்தனியாக பொதுநல வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.
அந்த மனுக்களில், 'கோவில்களில் குளம் தூர்வாருதல், கோவில் மண்டபம் புதுப்பித்தல் என்ற பெயரில் மணல் திருட்டு நடந்துள்ளது' எனவும் கூறியிருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் பேட்டி பி.டி.ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் நிலத்தை கணக்கிட்டு ஆக்கிரமிப்பை கண்டறியும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் நிலங்களை மீட்க கீழ் கோர்ட்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவால் நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை என கூறப்பட்டது.
அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதிகள், 'கோவில் நிலங்களை ஆக்கிரமித்து பெரிய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன இதுகுறித்து மூன்றாவது நபர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பின்னர் தான் இந்த ஆக்கிரமிப்பு குறித்த விவரங்கள் அறநிலையத்துறைக்கே தெரிய வருகிறது' என வருத்தம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பின்னர், 'அறநிலையத் துறை ஆய்வாளர்கள் முறையாக செயல் படாத காரணத்தினால் தான் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது இவர்கள் அறநிலையத்துறை ஆணையரின் கவனத்திற்கு ஆக்கிரமிப்பு குறித்த தகவலை உடனடியாக கொண்டு சென்றிருக்கவேண்டும் முறையாக செயல்படாத அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது? ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள கட்டடங்களை உள்ளாட்சி அமைப்பு எப்படி அனுமதிக்கிறது அதுவும் கோயில் நிலத்தில் கட்டிடம் கட்டி முடிக்கும் வரை காத்திருக்கும் அதிகாரிகள் அதன்பின் நோட்டீஸ் அனுப்புகின்றனர்' என்றனர் நீதிபதிகள்.
எனவே இதுபோன்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் சரியாக இருக்கும் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதி வழங்கியது யார் அந்த ஆக்கிரமிப்புகளை தடுக்க அவர் யார் என்று அதிகாரிகளின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்.
Source - Daily தந்தி