டிவி தொகுப்பாளினியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா-வைரல் வீடியோ!!
டிவி தொகுப்பாளினியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா-வைரல் வீடியோ!!
By : Kathir Webdesk
தமிழகத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் தமிழில் ஐயா படம் மூலம் அறிமுகமாகி சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் ஜோடியானார் அஜித் நடித்த பில்லா படத்தின் மூலம் தனது முத்திரையை பதித்தார். அடுத்து அவர் படங்கள் தொடர் வெற்றியை பெற ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாக நானும் ரௌடிதான் படத்தில் இளைஞர்களின் மனதில் அசைக்க முடியாத நாயகியாக உருவெடுத்தார்.
அடுத்து அறம் படத்தின் மூலம் ஹீரோயின்களும் ஹீரோ தான் படம் ஹீரோவால் மட்டும் ஓடாது ஹீரோயின்களாலும் ஓடும் என்பதை நிரூபித்தார். அவர் தமிழகத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று தற்போது அழைக்கப்படுகிறார்.
இவர் மலையாளத்தில் தான் தனது முதல் படத்தில் நடித்தார் என்பது தெரியும் ஆனால் அதற்கு முன் ஈன செய்து கொண்டிருந்தார் தெரியுமா நயன்தாரா கைராலி தொலைக்காட்சியில் பியூட்டி டாக்டர் எனும் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.
சென்ற வாரம் பிறந்தநாள் தனது 35 வது பிறந்த நாளை கொண்டாடிய நயன்தாராவுக்கு பிறந்தநாள் பரிசாக அவர் பணியாற்றிய வீடியோவை பரிசாக இணையத்தில் வெளியிட்டது. தற்போது அந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.