ஜம்மு-காஷ்மீர் விசயத்தில் முக்கிய திருப்பம்: அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் டெல்லி வந்து பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
ஜம்மு-காஷ்மீர் விசயத்தில் முக்கிய திருப்பம்: அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் டெல்லி வந்து பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு தற்போது சுமூக நிலை அடைந்து வருகிறது. அனைத்து மத்திய அமைச்சர்களும் அங்கு சென்று வருகின்றனர். பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தலைவர்களில் ஒருவரான பரூக் அப்துல்லாவும் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் விரைவில் அங்கு அரசியல் நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முன்னோட்டமாக நேற்று பிரதமர் மோடியை ஜம்முவின் APNI கட்சி தலைவர் புக்காரி தலைமையில் எட்டு காஷ்மீர் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்தனர்.
அப்போது ஜம்மு - காஷ்மீரில் உள்ள நிலவரங்கள் குறித்து பேசினர். மக்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் இடையே பெருமளவில் இடைவெளி குறைந்தாலும் இன்னும் முழு அளவில் இடைவெளி குறைய வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். மேலும் ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.
இது குறித்த திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என மோடி அவர்களிடம் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. சிறப்பு சட்ட அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு மோடியை காஷ்மீர் தலைவர்கள் சந்தித்து இருப்பது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.