Kathir News
Begin typing your search above and press return to search.

டுவிட்டர் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க் !

டுவிட்டர் லோகோவான நீல நிறக் குருவிக்கு பதிலாக நாய் படத்தை லோகோவாக மாற்றியுள்ளார் எலான் மஸ்க்.

டுவிட்டர் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க் !
X

KarthigaBy : Karthiga

  |  6 April 2023 6:31 AM IST

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபரில் 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அப்போது முதல் டுவிட்டர் செயலிலும் அதன் நிர்வாகத்திலும் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இதில் ஆட்குறைப்பு, 'புளுடிக்' வசதிக்கு கட்டணம் போன்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளும் அடங்கும்.


இந்த நிலையில் அடுத்த அதிரடி நடவடிக்கையாக டுவிட்டர் செயலியின் லோகோவை மாற்றி உள்ளார் எலான் மஸ்க். டுவிட்டர் என்றாலே நினைவுக்கு வருவது அதன் லோகோவன நீல நிறக் குருவி தான். ஆனால் அந்த குருவியின் படத்துக்கு பதிலாக ஒரு நாயின் படத்தை லோகோவாக மாற்றி உள்ளார். இந்த நாய் ஜப்பான் நாட்டின் ஷிபா வகை நாயாகும்.

இது பிரபல 'டாக்இகாயின்' கிரிப்டோகரன்சியின் லோகோ ஆகும். இந்த லோகோ அந்த நிறுவனத்தால் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதனிடையே யோகாவை மாற்றியது தொடர்பாக எலான் மஸ்க் ஒரு மீமை பகிர்ந்துள்ளார் . அதில் ஒரு காரில் ஷிபா வகை நாய் டிரைவர் இருக்கையில் அமர்ந்துள்ளது .ஒரு போலீஸ் அதிகாரி அதனிடம் லைசன்ஸ் பரிசோதிக்கிறார். அதில் நீல குருவி படம் இருக்க நாய் அது பழைய படம் என்று விளக்குவது போல் உள்ளது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News