Kathir News
Begin typing your search above and press return to search.

"கடைசி முறையாக கொடியேற்ற வந்துள்ளார்" என்று சென்ற ஆண்டு பிரதமர் மோடியை தூற்றிய பா.ஜ.க வெறுப்பு "பத்திரிக்கையாளர்" : இப்போது அவரை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்

"கடைசி முறையாக கொடியேற்ற வந்துள்ளார்" என்று சென்ற ஆண்டு பிரதமர் மோடியை தூற்றிய பா.ஜ.க வெறுப்பு "பத்திரிக்கையாளர்" : இப்போது அவரை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்

கடைசி முறையாக கொடியேற்ற வந்துள்ளார் என்று சென்ற ஆண்டு பிரதமர் மோடியை தூற்றிய பா.ஜ.க வெறுப்பு பத்திரிக்கையாளர் : இப்போது அவரை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Aug 2019 1:43 PM IST


பா.ஜ.க எதிர்ப்பு பத்திரிகையாளராக இணையத்தில் வளம்வருபவர் தான் சவுக்கு ஷங்கர். பிரதமர் மோடியின் மீது வெறுப்பை விதைப்பதையே தனது பிரதான தொழிலாக கொண்டுள்ள இவர், அவ்வப்போது தகாத வார்த்தைகளால் அரசியல்வாதிகளை திட்டும் பழக்கமும் கொண்டவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை கூட ஒரு முறை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் கெட்ட வார்த்தையால் திட்டிய இவர், பிறகு எதிர்ப்பு வலுக்கவே அந்த பதிவை நீக்கிவிட்டு மன்னிப்பும் கேட்டார். அவ்வளவு ஏன், அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் அவர்களையும் அருவருக்கத்தக்க வகையில் கெட்ட வார்த்தைகளில் பேசியுள்ளார். இவருக்கு பத்திரிக்கையாளர் என்ற அடையாளமும் ட்விட்டரின் அதிகாரப்பூர்வ கணக்கும் உள்ளது.


சென்ற ஆண்டு சுதிந்திர தினத்தின் போது, "ஏழைத்தாயின் மகன், கடைசி முறையாக கொடியேற்ற, செங்கோட்டையை வந்தடைந்தார்", என்று பிரதமர் மோடியை தூற்றி பதிவிட்டிருந்தார்.


https://twitter.com/savukku/status/1029545738785579009?s=19



இந்த பதிவிற்கு சாமானிய மக்கள் பலரும், அடுத்த முறையும் பா.ஜ.க தான் வெற்றி பெறும், மோடி தான் பிரதமராக வருவார் என்று கூறி பதிலடி கொடுத்தனர்.இந்த பதிவிற்கு ட்விட்டர்வாசி ஒருவர், "அடுத்த வருஷம் இந்த டிவிட்ட உனக்கு ஞாபக படுத்துறேன் அதை பாத்துட்டு தொங்கீரு…" என்று பதிவிட்டிருந்தார்.


https://twitter.com/kovairajendraa/status/1029561659440787456?s=19


அதற்கு பதிலளித்த அந்த தி.மு.க ஆதரவு பத்திரிக்கையாளர், "பொறுத்திருந்து பார்ப்போம். காலம் பதில் சொல்லும்", என்று பதிவிட்டிருந்தார்.


https://twitter.com/savukku/status/1029561981559160832?s=19



சென்ற முறையை காட்டிலும் அதிக பெரும்பான்மை பலத்தை மேல் சபையிலும், கீழ் சபையிலும் பெற்றுள்ள பா.ஜ.க, பிரதமர் மோடி தலைமையில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், இந்த பதிவை மீண்டும் பதிவிட்டு சவுக்கு ஷங்கரை டேக் செய்து, கிண்டலடித்து வருகின்றனர் ட்விட்டர்வாசிகள்.


https://twitter.com/itsNilaSuba/status/1161896110635409409?s=19


https://twitter.com/Karthic83825130/status/1161897926009901056?s=19


https://twitter.com/Kongu/status/1161891485509287940?s=19



https://twitter.com/kovairajendraa/status/1161893890061819904?s=19



https://twitter.com/umagarghi/status/1161911054386941952?s=19



https://twitter.com/MunimaOffl/status/1161891902439866368?s=19










Next Story
கதிர் தொகுப்பு
Trending News