Kathir News
Begin typing your search above and press return to search.

இரண்டு பேர் அதிரடி கைது.. உச்சக்கட்ட பாதுகாப்பில் தமிழகம்.. அதிர்ச்சி தகவல்.!

இரண்டு பேர் அதிரடி கைது.. உச்சக்கட்ட பாதுகாப்பில் தமிழகம்.. அதிர்ச்சி தகவல்.!

இரண்டு பேர் அதிரடி கைது.. உச்சக்கட்ட பாதுகாப்பில் தமிழகம்.. அதிர்ச்சி தகவல்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Nov 2020 10:25 AM GMT

டெல்லி நகரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அலேகான் பகுதியில் உள்ள பராக் அருகே இரவு 10 மணி அளவில் போலீசார் மறைந்திருந்த இரண்டு பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.

இருவரிடமிருந்தும் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 20 வயது நிரம்பிய அப்துல் லதீப் மற்றும் முகமது அஸ்ரப் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இரண்டு பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் பெற்ற வாக்குமூலம் அடிப்படையில் பல்வேறு நகரங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகின்ற 21ம் தேதி தமிழகம் வருகிறார். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளால் தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தமிழகத்தில் உள்ள காஷ்மீர் வியாபாரிகள் பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதியதாக காஷ்மீர் வியாபாரிகள் யாராவது வந்துள்ளனரா என்றும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் இருந்து வரும் அழைப்புகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தமிழகத்திற்கு வரும் உள்துறை அமைச்சர் நிகழ்ச்சிகளில் ஏதேனும் அசம்பாவிதம் வேளைகளில் தீவிரவாதிகள் ஈடுபடலாம் என்று நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் போலீசார் உச்சகட்ட பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News