நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள்: மத்திய அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டுச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
By : Karthiga
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் ஐந்தாம் தேதி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் வகையில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் நல்லாசிரியர் விருதுகள் சான்றிதழ்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் 2023- ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது தொடர்பான அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் முன்தினம் இரவு வெளியிட்டது.அதன்படி நாடு முழுவதும் இருந்து விண்ணப்பித்த ஆசிரியர்களில் சிறந்த 50 ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பீஹார் ஆந்திராவில் இருந்து அதிகபட்சமாக தலா மூன்று ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதை அடுத்து தமிழ்நாடு, ராஜஸ்தான் , குஜராத் , மத்திய பிரதேசம், ஒடிசா உத்தர பிரதேசம் கர்நாடகா தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா இரண்டு பேரும் மற்ற மாநிலங்களில் இருந்து ஒருவரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்த மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டி. காட்வின் வேதநாயகம் ராஜ்குமாரும் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீர கேரளம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ் மாலதியையும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் ஐந்தாம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு விருது வழங்கும் கௌரவிக்க உள்ளார்.
SOURCE :DAILY THANTHI