பழமையான கத்தோலிக்க சர்ச் சீல் வைப்பு; 12 கிறிஸ்தவ பிஷப்கள் கைது. பதட்டம், போலீஸ் குவிப்பு
பழமையான கத்தோலிக்க சர்ச் சீல் வைப்பு; 12 கிறிஸ்தவ பிஷப்கள் கைது. பதட்டம், போலீஸ் குவிப்பு
By : Kathir Webdesk
சபரிமலை விவகாரத்தில் இளம் பெண்களை ஐயப்பன் கோவிலில் நுழைய வைத்து, இந்துக்களின் புனிதத் தன்மையை சீரழிக்க வேண்டும் என்பதற்காக கேரளா கம்யூனிஸ்ட் அரசின் முதலமைச்சர் பிணராயி விஜயன் கடுமையாக அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டார். இதற்கு அவர் சொன்ன காரணம், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.
10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதில்லை. இது காலம் காலமாக நடைமுறையில் இருந்து வரும் மரபு. இதை எந்த இந்து பெண்களும் மீற விரும்பியதில்லை.
ஆனால் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று கூறியது. இந்துக்களின் உணர்வுகளுக்கு நேர் எதிரான இந்த தீர்ப்பை அமுல்படுத்தியே தீருவது என்று கம்யூனிஸ்ட் முதல்வர் பிணராயி விஜயன் அடம்பிடித்தார். அதோடு சுவாமி ஐயப்பன் மீது நம்பிக்கையே இல்லாத இரு கம்யூனிஸ்ட் பெண்களையும் வலுக்கட்டாயமாக, போலீஸ் உடையில் சபரிமலையில் கொண்டு சென்று புனிதத்தை கெடுக்க வைத்தார். ஒட்டு மொத்த இந்துக்களின் மனங்களில் இடி விழ வைத்தார்.
இது இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம்.
ஆனால் இதே கேரள மாநிலத்தில், கிறிஸ்தவ சர்ச்சை நிர்வகிப்பது தொடர்பான, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல் படுத்தாமல் காலில் போட்டு மிதித்தார் இந்த பிரனாய் விஜயன். இது கிறிஸ்தவ நம்பிக்கை சார்ந்த விஷயம்கூட இல்லை. யார் அதிகாரம் செலுத்துவது என்பது தொடர்பான பிரச்சினை. அவ்வளவே.
இரண்டும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் தான். இரண்டும் ஒரே காலகட்டத்தில்தான் வழங்கப்பட்டன. ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் கம்யூனிஸ்டு அரசு நடந்து கொண்ட விதமும், சர்ச்சு விவகாரத்தில் நடந்து கொண்ட விதமும் கம்யூனிஸ்ட்களின் பித்தலாட்ட முகத்தை வெளியுலகிற்கு காட்டியது. அதேபோல் இந்து நம்பிக்கைகளை சிதைப்பதில் கம்யூனிஸ்ட்களுக்கு உள்ள அளவுகடந்த வெறியையும் வெளிச்சம் போட்டு காட்டியது.
1653-ஆம் ஆண்டு, கேரள மாநிலத்தில் மலபார் கடற்கரையில் வசித்த ஆயிரக்கணக்கான புனித தாமஸ் கிறிஸ்தவர்கள், வாடிக்கன் உள்ள போப் தலைமையில் இயங்கும், கத்தோலிக்கத் திருச்சபையை விட்டுப் பிரிந்து மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியரீதித் திருச்சபையைத் தொடங்கினர். ஆனால் இவர்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்தான்.
பின்னர் 1599-ஆம் ஆண்டு, புனித தாமஸ் பிரிவு கிறிஸ்தவர்களுக்கு சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டன. இதற்கான டயோசிஸ் கூட்டம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள உதயம்பெரூர் என்ற இடத்தில் நடந்தது. அதன்பிறகு அவர்கள், “ஆர்த்தொடாக்ஸ் மலன்கரா” என்ற தனி பிரிவாக செயல்பட தொடங்கினர்.
இந்த பிரிவு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், கேரளாவில் உள்ள மற்ற கத்தோலிக்க கிறிஸ்தவர்களைப் போன்று, ரோமில் உள்ள கத்தோலிக்க மதகுரு போப்பை ஏற்றுக்கொள்வதில்லை. அந்தியோக் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக செயல்பட்டனர்.
அந்தியோக்கு, அலெக்ஸாண்டிரியா, ஜெருசலேம், மேலும் பல கிழக்கத்திய நாடுகளில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், தனியாக இயங்குகின்றனர். அவர்கள் வாடிகன் போப்பின் தலைமையை ஏற்பதில்லை. போப்புக்கு இணையான இந்த பிரிவினருக்கு தனியாக கத்தோலிக்க மதகுரு உண்டு.
இவர்களின் தற்போதைய மதகுருவாக அப்சி இருக்கிறார். 73 வயதான இவர், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி இந்த பதவிக்கு வந்தார். இவர்கள் அந்தியோக் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இந்த பிரிவு கத்தோலிக்க பிஷப்களின் அங்கிகள் கறுப்பு நிறத்தில் இருக்கும்.
1910-ஆம் ஆண்டு மலபார் கிறிஸ்தவர்களிடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அவர்கள் இரு பிரிவாக பிளவுபட்டு, ஒரு பிரிவினர் “ஜாக்கோபைட் சிரியன் சர்ச்” - ஐ உருவாகினர். இவர்கள் அந்தியோக் கத்தோலிக்க நடைமுறைகளை பின்பற்றினர்.
மற்றொரு பிரிவினர் “மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சர்ச்” - இன் கீழ் இயங்கினர். இவர்கள் தங்களின் பிஷப்பை தாங்ளே நியமித்துக்கொண்டர். அவர் கோட்டயத்தை தலைமை இடமாகக்கொண்டு செயல்பட தொடங்கினர்.
இந்த நிலையில் 1934-ஆம் ஆண்டு, மீண்டும் இந்த இரு பிரிவினரும் ஒன்றாக சேர்ந்தனர். அவர்கள் கோட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு “ஆர்த்தொடாக்ஸ் மலன்கரா சர்ச்” - இன் கீழ் செயல்பட்டனர். இவர்களின் மத குருவாக பிஷப் பசிலியோஸ் கீவர்கீஸ் செயல்பட்டார். இதுதொடர்பாக ஒப்பந்தமும் போட்டுக்கொண்டனர்.
இதன் மூலம் இவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் தனிபிரிவாக செயல்பட்டனர். அதாவது போப்பையும் பின்பற்ற வில்லை. அந்தியோக் தலைமையையும் இவர்கள் பின்பற்ற வில்லை.
இந்த நிலையில் 1974-ஆம் ஆண்டு, மீண்டும் இந்த இரு கிறிஸ்தவ பிரிவினரிடையே சண்டை மூண்டது. இதனைத்தொடர்ந்து மறுபடியும் இரு பிரிவாக பிரிந்து செயல்பட்டனர். 1995-ஆம் ஆண்டு, இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் 1934-ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதாவது ஆர்த்தொடாக்ஸ் மலன்கரா சர்ச் நிர்வாகத்தின் கீழ் இரு பிரிவினரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
பின்னர், 2002-ஆம் ஆண்டு மறுபடியும் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பல சர்ச்சைகள் மூடப்பட்டன. இதனால் இந்த விவகாரம் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது.
2017-ஆம் ஆண்டு ஜூலையில் இது தொடர்பான இறுதித் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்யும் வகையில் மீண்டும் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி மொத்தமுள்ள 1100 சர்ச்சுகளும், ஆர்த்தொடாக்ஸ் மலன்கரா சர்ச் நிர்வாகத்தின் கீழ் செயல்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனை “ஜாகோபைட் சிரியன்” பிரிவினர் ஏற்க மறுத்தனர். கடந்த ஆண்டு (2018) ஜூலை மாதம், ஒரு லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணியை நடத்தி, தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நிறைவேற்ற காலகெடு நிர்ணயிக்க கூடாது என்று முதல்வர் பிரனாய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
அதாவது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்தினால் கிறிஸ்தவர்களில், ஒரு பிரிவினரின் மனது புண்படும் என்று கிறிஸ்தவரான பிரனாய் விஜயன் முடிவுசெய்தார். ஆனால் அதேநேரம் சபரிமலை விஷயத்தில், ஒட்டுமொத்த இந்துக்களின் மனது புண் பட்டாலும் பரவாயில்லை, இந்துக்களின் நம்பிக்கையை எவ்வளவு தூரம் காலில் போட்டு மிதித்தாலும் அது பிரச்சினை இல்லை. இதுதான் கம்யூனிஸ்ட்களின் கொள்கை.
இதற்கிடையே சுப்ரீம் கோர்ட் உத்தரவை உடனே அமல்படுத்த வேண்டும் என்று ஆர்த்தொடாக்ஸ் சர்ச் நிர்வாகம் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணையின்போது, கேரள முதல்வர் பிரனாயி விஜயனுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தது கேரள ஐகோர்ட். “சபரிமலை விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த தீவிரம் காட்டிய கேரள அரசு, ஏன் சர்ச் விஷயத்தில் தாமதம் செய்கிறது. எதற்காக இந்த இரட்டை நிலைப்பாடு” என்று கண்டித்தது.
அதன்பிறகும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை, அமல்படுத்த கம்யூனிஸ்ட் அரசு முன்வரவில்லை. இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பதையே கம்யூனிஸ்ட் பிரனாய் விஜயன் அரசு விரும்பியது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரவம் என்ற இடத்தில் மிகப்பழமையான செயின்ட் மேரி சர்ச் உள்ளது. இது ஜெகோபைட் சிரியன் சர்ச் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
இந்த சர்ச் முன்பாக ஆர்த்தடாக்ஸ் மலன்கரா பிரிவினர் ஒன்று திரண்டனர். அவர்கள் சர்ச்சுக்குள் நுழைய முற்பட்டனர். இதனால் சர்சின் கேட்களை பூட்டிவிட்டு ஜெகோபைட் சிரியன் பிரிவினர் வளாகத்தில் இருந்து போராடினர். 12 பிஷப்கள், பல பாதிரியார்கள் மற்று ஏராளமான கிறிஸ்தவர்கள் சர்ச் வளாகத்தில் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து கேரள ஹை கோர்ட் “இன்று பகல் 1 45 மணிக்குள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தும் வகையில் சர்ச் வளாகத்தில் கூடியுள்ள ஜகோபைட் சிரியன் பிரிவினரை வெளியேற்ற வேண்டும்” என்று எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகத்திற்கு நேற்று (26.09.2019) உத்தரவு பிறப்பித்தது. இதனால் பதட்டம் அதிகமானது.
இதனைத்தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அது தோல்வியடைந்ததால், சர்ச் கேட்டின் பூட்டுகளை உடைத்து போலீசார் உள்ளே நுழைந்தனர். அவர்கள் சர்ச்சில் இருந்த ஜாகோபைட் சிரியன் பிரிவினரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பின்னர் 12-க்கும் அதிகமான பிஷப்புகள், பாதிரியார்கள் உள்பட நூற்றுக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, சர்ச் வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, சர்ச் சீல் வைக்கப்பட்டு, அதன் சாவிகள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த சாவிகளை மாவட்ட நிர்வாகம், கேரள ஐகோர்ட்டில் ஒப்படைத்தது.
இதன் மூலம் கம்யூனிஸ்ட் முதல்வர் பிணராயி விஜயனின் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்து, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை, கேரள ஐகோர்ட்டு அமல்படுத்தி உள்ளது.