'இயேசு அழைக்கிறார்' என மதமாற்ற துண்டு பிரச்சாரம் விநியோகித்த பெண்கள் - களியக்காவிளை போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை
பேருந்து நிலையத்தில் கிறிஸ்துவ மதம் மாறுவதற்கான துண்டு பிரசாரத்தை விநியோகித்த இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
By : Bharathi Latha
கட்டாய மதமாற்றத்தின் பெயரில் ஒருவரை மற்றொரு மதம் மாறுவதற்கான செயல்களை செய்வது சட்டப்படி குற்றமாகும். மேலும் அவர்களுடைய ஏழ்மை சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அவர்களை மதம் மாற வற்புறுத்துவது குற்றம். தமிழகத்தில் நாளுக்கு நாள் மிஷினரிகள் மற்றும் மதம் மாற்றும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த ஒரு சூழ்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கலியக்க விளை பேருந்து நிலையம் அருகே கிறிஸ்தவ மதம் மாற்றும் வகையில் செய்வதற்கான துண்டு பிரசுரத்தை இரு பெண்கள் விநியோகித்து இருக்கிறார்கள். மேலும் கிறிஸ்துவ மதம் மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்ட பெண்களை பா.ஜ.க மற்றும் இந்து அமைப்ப அமைப்பினர் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.
குறிப்பாக பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் வெளிப்படையாக மதமாற்றத்தில் ஈடுபடுவதற்கான முயற்சியாகவும் இது பார்க்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக பா.ஜ.க மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் சார்பில் புகார் ஒன்றியம் அளித்து இருக்கிறார்கள். இந்த புகாரின் அடிப்படையில் இரு பெண்களையும் காவல் நிலையத்தில் கொண்டு போய் விசாரித்து வருகிறார்கள் போலீசார். அவர்களிடம் துண்டு பிரசுரங்கள் மற்றும் கிறிஸ்துவ மத புத்தகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மாத பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டோம் என்று அவர்கள் கூறியதை தொடர்ந்து இரு பெண்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Dinamani