அப்போ வந்தாலே அலற விடுவோம் - இப்போ அதுக்கும் மேலே : காஷ்மீரில் தீவிரவாதிகளை துவம்சம் செய்த இந்திய இராணுவம்.!
அப்போ வந்தாலே அலற விடுவோம் - இப்போ அதுக்கும் மேலே : காஷ்மீரில் தீவிரவாதிகளை துவம்சம் செய்த இந்திய இராணுவம்.!
By : Kathir Webdesk
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் தனியாகவும், லடாக் தனியாகவும் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரிவினைவாதிகளால் அரங்கேற்றப்படும் அசம்பாவித சம்பங்களை தவிர்ப்பதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் பல்வேறு கட்டுப்படுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க ராணுவம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் பந்திபோரா பகுதியில் இன்று பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தககவல் கிடைத்ததையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடமும் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்த வந்த அவர்கள் யார், எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.